மாளிகாவத்தை மையவாடி நில அளவீடு மேற்கொள்க - நீதி­மன்றம் உத்­த­ரவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 6, 2018

மாளிகாவத்தை மையவாடி நில அளவீடு மேற்கொள்க - நீதி­மன்றம் உத்­த­ரவு

மாளி­கா­வத்தை மைய­வாடி காணி­யையும், அத­னுடன் தொடர்புபட்ட தொன் உபாலி ஜய­சிங்­கவின் காணி­யையும் நில அளவீடு செய்­யும்­படி கொழும்பு மாவட்ட நீதி­மன்றம் இரு தரப்பினருக்கும் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. 

மாளி­கா­வத்தை மைய­வா­டிக்கு சொந்­த­மான காணியை சட்டவிரோத­மாக அப­க­ரித்து உபாலி ஜய­சிங்க மாடி கட்டிடமொன்றினை நிர்­மா­ணித்து வரு­வ­தா­கவும் அதற்கு தடையுத்த­ரவு பிறப்­பிக்­கும்­ப­டியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மத உரிமைக­ளுக்­கான அமைப்பு (SLMRRO) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்­குத்­தாக்கல் செய்­துள்­ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நீண்ட கால­மாக விசா­ர­ணையின் கீழுள்ள இந்த வழக்கு தொடர்பிலே நீதி­மன்றம் காணியை அள­வீடு செய்­யு­மாறு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­தென ஸ்ரீலங்கா முஸ்லிம் மத உரி­மை­க­ளுக்­கான அமைப்பின் தலைவர் அஸ்லம் ஒத்மான் தெரி­வித்தார்.

மாளி­கா­வத்தை மைய­வாடி காணி நில அள­வை­யாளர் ஏ.எஸ்.அமீரினால் அள­வீடு செய்­யப்­பட்­ட­தாகும். மாளி­கா­வத்தை மைய­வாடி காணிக்கு நீதி பெற்­றுக்­கொள்­வதில் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் பல முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றது. காணியை அள­வீடு செய்­வ­தற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை எமக்குக் கிடைத்துள்ள ஆரம்ப வெற்றியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment