இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்த அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளே இருக்கின்றனர் - விநாயகமூர்த்தி முரளிதரன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 19, 2018

இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்த அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளே இருக்கின்றனர் - விநாயகமூர்த்தி முரளிதரன்

இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்த அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளே தற்பொழுது இருப்பதாக முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். 

இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்தவர்கள் பட்டியலில் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமசந்திரன், ஜனா ஆகியோரும் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப் ஆகியன தங்கள் போராட்டத்தை காட்டிக்கொடுத்த துரோகிகள் என்றும் இவர்களை துரோகிகள் என்று துரத்தி துரத்தி சுட்டோம் என்றும் என்னை துரோகி என்று சொல்ல இவர்களுக்கு தகுதி இல்லை என்றும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை காப்பாற்றி நல்லதொரு நிலைக்கு கொண்டு வருவதற்கே தான் போராடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தை மூலம் சிறந்த தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்று தான் முயற்சி செய்ததாகவும் ஆனால் தன் மீது பழி சுமத்தவே 6 ஆயிரம் போராளிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தானும் விலகி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தான் விலகிச் சென்ற வரலாற்றை எடுத்துரைத்திருந்தார்.

No comments:

Post a Comment