நாட்டில் சிறந்த உள்ளூராட்சி நிறுவனக் கட்டமைப்பை தாபிப்பதற்கு அனைத்து உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கும் விசேட செயலமர்வு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 2, 2018

நாட்டில் சிறந்த உள்ளூராட்சி நிறுவனக் கட்டமைப்பை தாபிப்பதற்கு அனைத்து உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கும் விசேட செயலமர்வு

நாட்டில் சிறந்த உள்ளூராட்சி கட்டமைப்பை தாபிப்பதற்கு நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் ஆன்மீக அபிவிருத்திச் செயலமர்வு தொடரொன்றை மாகாண மட்டத்தில் நடத்துவதற்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதுவரையில் உள்ளூராட்சி நிறுவனங்கள் பௌதீக வள அபிவிருத்திக்காக மட்டுமே செயற்பட்டு வந்தபோதும், மக்களின் பண்பாடுகளை அபிவிருத்தி செய்து சிறந்த சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பை வழங்கும் மத்திய நிலையமாக உள்ளூராட்சி நிறுவனங்கள் மாற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று (01) பொலன்னறுவை மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்காக நடத்தப்பட்ட செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கிராமம் மற்றும் தேர்தல் தொகுதியில் ஒழுக்கப் பண்பாடான சமூகத்தையும் சிறந்த பிரஜைகளையும் உருவாக்குவதற்காக தான் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள் குறித்து உரிய தெளிவுடன் உள்ளூராட்சி நிறுவன மட்டத்தில் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். 

இதன்போது போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பல்வேறு சமூக சவால்களை விளங்கிக்கொண்டு அவற்றிற்கு தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.

பொலன்னறுவை மாவட்ட உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, உள்ளூராட்சி நிறுவன செயற்பாடுகளில் மிகவும் முக்கியமானது அப்பிரதிநிதிகளின் நடத்தையாகும் என்று குறிப்பிட்டார். 

பிரதேச அபவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அரசாங்க அதிகாரிகளின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் உள்ளூராட்சி நிறுவனங்களை மக்கள் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களாக மாற்றுவதற்கும் இதன் மூலமே சாத்தியமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசியல் கட்சி ஒன்றிடம் இருக்க வேண்டிய ஒழுக்கத்துடன் அரசியல்வாதிகளிடம் இருக்க வேண்டிய ஒழுக்கம், ஆளுமை, செவிமடுக்கின்ற பண்பு மற்றும் ஆக்கத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் தேவையையும் புதிய உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கிய ஜனாதிபதி அவர்கள், குறிப்பாக மக்களிடம் சென்று அவர்களின் தேவைகளை கண்டறிந்து நிறுவன ரீதியாக நிறைவேற்ற வேண்டிய பணிகளை குறைவின்றி நிறைவேற்ற வேண்டியதன் பொறுப்பு குறித்து தனது கடந்த கால அரசியல் அனுபவங்களை நினைவுபடுத்தி விளக்கினார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க கொலொன்னே, பொலன்னறுவை மாவட்ட அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் பொலன்னறுவை மாவட்ட உள்ளூராட்சி நிறுவனங்களின் போக்குவரத்து தேவைகள் மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்குடன் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி முச்சக்கர வண்டிகளை வழங்கினார். 

No comments:

Post a Comment