தங்க பிஸ்கட்டுகளை கடத்த முற்பட்ட சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 60 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
06 கிலோ கிராம் நிறையுடைய கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி சுமார் 37 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று இரவு (22) விமான நிலையத்தின் வௌியேறும் பகுதியில் வைத்து 50 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு கூறியுள்ளது.
வௌிநாட்டில் இருந்து வந்த ஒருவரால் இந்த தங்கம் அவரிடம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment