அமெரிக்க பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் நேற்று முதல் அமுல் - News View

About Us

About Us

Breaking

Friday, June 22, 2018

அமெரிக்க பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் நேற்று முதல் அமுல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைக்கு எதிராக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

2.8 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீல ஜீன்ஸ், மோட்டார் சைக்கிள்கள், போர்போன் விஸ்கி போன்ற பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு பொருட்கள் மீது 25%, அலுமினியப் பொருட்கள் மீது 10% என்று வரிவிதிப்பதாக கடந்த மார்ச் மாதம் டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதனையடுத்து, தென்கொரியா, அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் உலோகங்களின் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க இணங்கின.

ஜூலை 1 முதல் 16.6 பில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான அமெரிக்க சரக்குகள் மீது வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்தது.

இரு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து வரும் ஸ்டீல், பன்றி இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் மீது மெக்சிகோ வரி விதித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வரி விதிப்பு தொடர்பாக டப்ளின் நகரில் உள்ள அயர்லாந்து நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் கிளவுட் ஜங்கர் பேசினார். அப்போது அவர் கூறும்போது, 

“அமெரிக்காவின் வரி விதிப்பு, எல்லா தர்க்கத்துக்கும், வரலாற்றுக்கும் எதிராக அமைந்து உள்ளது. எனவே எங்களின் பதிலடி, தெளிவானது. சரியாக அளவிடப்பட்டது” என்று கூறினார்.

மேலும், “அமெரிக்க வரி விதிப்பை சமன் செய்யவும், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாக்கவும், என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வோம்” என்றும் கூறினார்.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலக்காக, புகையிலை, ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள், வேர்க்கடலை தூள் உள்ளிட்டவை அமைந்து உள்ளன. இவற்றின் மீது ஐரோப்பிய ஒன்றியம் 25 சதவீதம் வரி விதித்து உள்ளது.

மேலும், அமெரிக்க காலணிகள், துணி வகைகள், சலவை எந்திரங்கள் மீது 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

அமெரிக்க வரி விதிப்பும், அதற்கு பதிலடி தருகிற விதத்தில் பிற நாடுகளின் வரி விதிப்பும் உலகளாவிய வர்த்தக போராக மாறுகிற ஆபத்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளன.

No comments:

Post a Comment