விளையாட்டுத்துறை அமைச்சர் - சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் இன்று டுபாயில் சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 5, 2018

விளையாட்டுத்துறை அமைச்சர் - சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் இன்று டுபாயில் சந்திப்பு

விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் சங்க மனோகரை சந்திக்கவுள்ளார். 

டுபாயில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் நிர்வாகப்பணிகள் மற்றும் கிரிக்கட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் குறித்து சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் அமைச்சருடன் ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment