பால்கன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 2, 2018

பால்கன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார்

கல்முனை பால்கன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு 01.06.2018 வெள்ளிக்கிழமை கல்முனை கடற்கரை மைதானத்தின் கடற்கரை முன்றலில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக் கழகத்தின் தலைவர் யூ.கே. லாஃபிர் அவர்களின் தலைமையில் ஆரம்பமான மேற்படி நிகழ்வில் கழகத்தின் ஆரம்ப கால உறுப்பினர்கள், கழக வீரர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி நிகழ்வில் பால்கன் விளையாட்டுக் கழகம் கடந்து வந்த இடர் நிறைந்த பாதைகள், அபிவிருத்தியில் பின்தங்கி இருக்கும் கல்முனை கடற்கரை மைதானம் மற்றும் கழகத்தின் எதிர்கால நிகழ்ச்சித் திட்டங்கள் போன்றன தொடர்பில் அணியின் நிருவாக உறுப்பினர்கள் பலரும் தங்களது கருத்துக்களையும் ஆதங்கங்களையும் தெரிவித்தனர். இறுதியாக இராப் போசன நிகழ்வுடன் மேற்படி நிகழ்வு நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment