புகையிர வீதி நிர்மாணப் பணிகளால் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ள மக்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 6, 2018

புகையிர வீதி நிர்மாணப் பணிகளால் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ள மக்கள்

மாத்தறை - பெலிஅத்த இடையிலான புகையிர வீதியின் நிர்மாணப் பணிகள் காரணமாக பலவின்ன மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் குடிநீர்க் கிணறுகள் வற்றிப்போயுள்ளதால் அந்தப் பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். 

மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றிக் கொள்ள தேவையான விரைவான தீர்வொன்றை வழங்குமாறு அம்மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மாத்தறை - பெலிஅத்த இடையிலான புகையிர வீதியின் நிர்மாணப் பணிகள் கடந்த 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

புகையிர வீதியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், கடந்த இரண்டு வருடமாக பலவின்ன மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் உள்ள குடிநீர்க் கிணறுகள் அனைத்தும் வற்றிப்போயுள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர். 

அந்தப் பிரதேசத்தில் உள்ள சுமார் 30 குடும்பங்கள் கிணறுகள் மூலம் தமது குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதால் தற்போது பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார். 

இந்த நிலை காரணமாக வாரத்திற்கு 20 லீற்றர் குடிநீர், புகையிர வீதி நிர்மாண நிறுவனத்தால் வழங்கப்பட்ட போதிலும் அவை போதுமானதாக இல்லை என்பதால் அதிகாரிகள் விரைவாக அவதானம் செலுத்த வேண்டும் என்று பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment