ஹெலிகொப்டர் பெற மஹிந்தவுக்கு யாரின் அனுமதியும் தேவையில்லை - News View

About Us

About Us

Breaking

Friday, June 1, 2018

ஹெலிகொப்டர் பெற மஹிந்தவுக்கு யாரின் அனுமதியும் தேவையில்லை

நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு ஹெலிகொப்டரொன்றை பெற்றுப் பயணம் செல்ல எவரின் அனுமதியும் பெறத் தேவையில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது என பிவிதுரு ஹெலஉருமய கட்சி தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

2015 ஜனவரி 8 ஆம் திகதி தங்கல்லவுக்கு செல்ல முன்னாள் ஜனாதிபதிக்கு யார் ஹெலிகொப்டர் வழங்கினார் என்பது தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பில் குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது,

2016 ஏப்ரல் மாதத்தில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, தான் மஹிந்த வீடு செல்வதற்கு ஹெலிகொப்டர் வழங்கியதாக கூறினார்.

தேர்தலில் தான் தோற்றிருந்தால் 6 அடி குழிக்கு தான் சென்றிருக்க நேர்ந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஹெலிகொப்டர் வழங்கிய விவகாரம் தொடர்பில் அவர் தற்போது வேறு கதையொன்றை கூறியுள்ளார். ஜனாதிபதியின் இரு கருத்துக்களும் தவறானவை.

2015 ஜனவரி 9 ஆம் திகதி காலை 9.30 மணிளவில் நாட்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்‌ஷ இருந்தார். நாட்டு ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன மாலை 6.30 மணிக்குத்தான் பதவி ஏற்றார். அரசாங்க ஹெலிகொப்டர் ஒன்றை பெற்றே மஹிந்த வீடு சென்றார். நிறைவேற்று ஜனாதிபதியாக அவருக்கு இருக்கும் அதிகாரத்தின் படிதான் அவர் அதனை பெற்றார்.

நிறைவேற்று ஜனாதிபதிக்கு அரசாங்க ஹெலிகொப்டர் பெற யாரின் அனுமதியும் பெறத் தேவையில்லை.ஹெலிகொப்டரில் பயணம் செய்யும் ஜனாதிபதிக்கு இது கூட தெரியாமல் போனது கவலை தருகிறது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment