4 கோடி ரூபா வருமானம் ஈட்டித்தந்த அம்பாறை பெரிய களப்பில் சட்டவிரோத கட்டடங்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, June 8, 2018

4 கோடி ரூபா வருமானம் ஈட்டித்தந்த அம்பாறை பெரிய களப்பில் சட்டவிரோத கட்டடங்கள்

நாட்டில் காணப்படும் 116 களப்புகளில் பாரிய பரப்பளவுடைய களப்புகளின் அடிப்படையில் ஐந்தாம் இடத்தில் அம்பாறை – பெரியகளப்பு காணப்படுகின்றது.

ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் பெரிய களப்பு காணப்படுகின்றது. கல்ஓயா விவசாய காணியிலிருந்து வௌியேறும் நீர் இரண்டு கழிமுகங்களூடாக பெரியகளப்பில் சேர்கின்றது.

இறால் வளம்மிக்க பெரிய களப்பில் வருடத்தின் பெப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இறால் பிடிப்பிற்காக வௌிமாவட்ட மீனவர்களும் வருகைதருவது வழக்கம்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில், இம்முறை பெரிய களப்பிலிருந்து நான்கு கோடி ரூபா பெறுமதியான இறால்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார வளத்தின் அடிப்படையில் நோக்குமிடத்து கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளங்களுக்குள் ஒன்றாக பெரியகளப்பு விளங்குகின்றது.

இவ்வாறு பெறுமதி வாய்ந்த களப்பாக காணப்படும் இந்த பகுதி தற்போது மண்ணிட்டு நிரப்பப்படுகின்றது. இதனூடாக அந்த பகுதியில் சட்டவிரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.

1996 ஆம் ஆண்டு இரண்டாம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல்வள சட்டத்தினூடாக களப்புகளின் உரித்து கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள போதிலும், அரச காணிகளுக்கான சட்டப்பூர்வ அதிகாரம் பிரதேச செயலகங்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், பெரிய களப்பு அழிவடைவதற்கு ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேச செயலாளர்களின் அசமந்தப்போக்கே காரணமாக அமைந்துள்ளது.

32 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விசாலமாக பரந்து காணப்பட்ட பெரிய களப்பை 21 சதுர கிலோமீட்டராக குறைத்து முன்னெடுக்கப்பட்டுள்ள கையகப்படுத்தலை தடுத்து நிறுத்த வேண்டியது கட்டாயமானது.

No comments:

Post a Comment