துருக்கி விமானப்படை தாக்குதலில் 26 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 19, 2018

துருக்கி விமானப்படை தாக்குதலில் 26 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு

ஈராக் நாட்டின் வடபகுதி மற்றும் துருக்கி நாட்டின் தென்கிழக்கு மாகாணங்களில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் 26 குர்திஷ் போராளிகள் உயிரிழந்தனர். 

ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் பயங்கரவாதிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர்.

இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இவர்களை வேட்டையாடும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், குர்திஸ்தான் பயங்கரவாத குழுக்கள் முகாம்கள் அமைத்து தங்கியுள்ள, தென்கிழக்கு துருக்கியின் தியார்பகிர், சிர்னாக் மாகாணங்கள் மற்றும் வடக்கு ஈராக்கின் அவாசின் - பாஸ்யான் பகுதிகளில் துருக்கி விமானப்படையினர் கடந்த 17 மற்றும் 18-ம் திகதிகளில் வான் தாக்குதல் நடத்தினர். 

இதில், சுமார் 26 குர்திஷ் அமைப்பினர் உயிரிழந்துள்ளனர் என டுவிட்டர் மூலம் துருக்கி ராணுவம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், பயங்கரவாதிகளின் முகாம்கள், ஆயுதக்கிடங்குகள் மற்றும் வெடிமருந்துகளும் இந்த தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment