டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா வரையில் அதிகரிக்கலாம் - பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 19, 2018

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா வரையில் அதிகரிக்கலாம் - பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன

அரசாங்கத்தினால் சிங்கப்பூர் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா வரையில் அதிகரிக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

இன்று (19) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

2005 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் ஆட்சியமைக்கும் போது டொலரின் பெறுமதி 105 ரூபாவாக இருந்ததாகவும், 2014 ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைக்கும் போது டொலரின் பெறுமதி 131 ரூபாவாக இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாடு பல்வேறு சிக்கலுக்கு மத்தியிலும் ரூபாயின் குறைந்த பட்ச பெறுமதி நூற்றுக்கு 1.98 என்ற பெறுமதியில் இருந்ததுடன் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருட காலப்பகுதிக்குள் ரூபாயின் குறைந்த பட்ச பெறுமதி நூற்றுக்கு 6.5 ஆக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இன்று காலை வர்த்தக வங்கிகளில் டொலருக்கான பெறுமதி 162.30 ஆக காட்டியுள்ளதாகவும், அது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்றதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment