11 வயதில் ஊக்கமிகு பேச்சு மூலம் பலரின் வாழ்க்கையை மாற்றும் சிறுவன் - News View

About Us

About Us

Breaking

Friday, June 8, 2018

11 வயதில் ஊக்கமிகு பேச்சு மூலம் பலரின் வாழ்க்கையை மாற்றும் சிறுவன்

பாகிஸ்தானை சேர்ந்த 11 வயது சிறுவன் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் உட்பட பலரின் வாழ்க்கையை தனது ஊக்கமிகு சொற்பொழிவின் மூலம் மாற்றும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹம்மாத் ஸாபி 11 வயது சிறுவன் தற்சமயம் இண்டெர்நெட்டில் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். இளம் வயதில் இவரின் பேச்சு அனைவரிடமும் பெரும் ஊக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இவர் ஊக்கமூட்டும் பேச்சாளராக பணியாற்றி வருகிறார். இவரின் ஊக்கமிகு வீடியோக்கள் யூடியூப்பில் பல பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கின்றன. 
ஹம்மாத் தற்போது பெஷாவர் நகரில் உள்ள ஸ்போக்கன் இங்லீஷ் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களுக்கு தனது பேச்சு மூலம் தன்னம்பிக்கை மற்றும் பேச்சுத்திறமையை வளர்த்து வருகிறார். ஹம்மாத் இளம் வயதில் பேசுவதை கேட்ட பலர் வருகின்றனர். அவர் தற்போது பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். 

ஒவ்வொரு நொடியும் சவாலானது. நமக்கு நேரும் தோல்வி தான் வெற்றிக்கு அடிப்படை என்ற ஹம்மாத்தின் நம்பிக்கை வாக்கியங்கள் பலரை வாழ்க்கையின் வெறுப்பிலிருந்து மேலே கொண்டு வருகிறது. தினமும் 12-13 மணி நேரம் புத்தகங்கள் படிக்கும் ஹம்மாத் சிறு வயதில் பெரும் கொள்கைகளை கடைபிடித்து வருகிறார்.

No comments:

Post a Comment