காத்தான்குடியில் தினக்குரல் பத்திரிகைக்கு தடை : நகர சபை அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 1, 2018

காத்தான்குடியில் தினக்குரல் பத்திரிகைக்கு தடை : நகர சபை அறிவிப்பு

முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் செய்தி வெளியிட்டமைக்கு காததான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர் கடும் கண்டனம்.

முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் தினக்குரல் பத்திரிகை கடந்த சனிக்கிழமை (28.4.2018) தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது.

இதனைக் கண்டித்துள்ள காத்தான்குடி நகர சபை காத்தான்குடி நகர சபையினால் நடாத்தப்படும் பொது நூலகத்திலும் அதே போன்று அதனோடு இணைந்த வாசிகசாலைகளிலும் தினக்குரல் பத்திரிகை போடுவதை முற்றாக தடை செய்துள்ளது.

அத்துடன் காத்தான்குடியிலுள்ள பத்திரிகை விற்பணையாளர்களை தினக்குரல் பத்திரிகையை விற்பணை செய்வதையும் கொள்வனவு செய்வதையும் தடை செய்வதெனவும் காத்தான்குடி நகர சபை தீர்மானித்துள்ளதாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் காத்தான்குடியிலுள்ள பத்திரிகை விற்பணையாளர்களுக்கு இன்று(1.5.2018) அனுப்பப்பட்டுள்ளது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment