ஏறாவூர், தாமரைக்கேணி, தக்வா நகரை சேர்ந்த 17 வயதுடைய நபீர் பாத்திமா நபீலா என்ற யுவதி இன்று (01/05.2018) முற்பகல் 11.45 மணியளவில் தனது வீட்டு வளையில் சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது தாய் வெளிநாடு சென்று 09 மாதங்கள். தந்தை சம்மாந்துறையில் ஹோட்டல் ஒன்றில் கூலி வேலை செய்வதால் மாதத்தில் இருமுறை வீட்டுக்கு வந்து செல்வார்.
இவர்களது இரு பெண் மக்களும், இரு ஆண் மக்களும், உம்மம்மாவின் (இஸ்மாலெப்பை முகம்மது உம்மா) பராமரிப்பிலேயே இருந்து வந்துள்ளனர். நபீலாதான் மூத்த பிள்ளை.
இன்று காலை தனது சகோதரியையும், இரு சகோதரர்களையும் வழமைபோன்று பாடசாலைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
இவரது உம்மம்மா இன்று காலை 10.00 மணியளவில் ஏறாவூர் பெண்சந்தைக்கு செல்லும் போது, "கதவை பூட்டிக்கிட்டு இரு மகள், சந்தைக்கு போயிட்டு அவசரமாக வாரன் " என்று சொல்லிவிட்டு சென்று மதியம் 12.00 மணிக்கு முன்பாக வீட்டுக்கு வந்த போது, பேத்தியை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகவே கண்டுள்ளார்.
எதுவித பிரச்சினைககளுமின்றி. கவலைகளின்றி இருந்த எனது பேத்திக்கு என்ன நடந்ததென்றே தெரியாது என உம்மம்மா அழுது தீர்த்தார்.
விடயமறிந்து நீதிபதியின் கட்டளைக்கமைவாக, திடீர் மரண விசாரணை அதிகாரி முஹம்மது நஸீர் ஏறாவூர் பொலிஸாருடனும், தடயவியல் பொலிசாருடனும் சென்று பிரேத பரிசோதனையை நடாத்துவதற்காக, சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாளை பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர், பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். என திடீர் மரண விசாரணை அதிகாரி முஹம்மது நஸீர் தெரிவித்தார்.
இது தொடர்பான முன்னரான செய்திக்கு
17 வயது யுவதிக்கு நடந்தது என்ன? ஏறாவூரில் அதிர்ச்சி சம்பவம்
http://www.newsview.lk/2018/05/17.html
No comments:
Post a Comment