வட,தென்கொரியாக்கள் ஐக்கியப்படுவதன் மூலம் உலக அபிவிருத்திக்கு கூடிய பங்களிப்புச் செய்யலாம் - கொரிய பிரதிநிதிகளிடம் அமைச்சர் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 31, 2018

வட,தென்கொரியாக்கள் ஐக்கியப்படுவதன் மூலம் உலக அபிவிருத்திக்கு கூடிய பங்களிப்புச் செய்யலாம் - கொரிய பிரதிநிதிகளிடம் அமைச்சர் ஹக்கீம்

வடகொரியாவும், தென்கொரியாவும் ஐக்கியப்பட்டு ஒன்றிணைவதன் மூலம் உலக அபிவிருத்திக்கு கூடிய பங்களிப்புச் செய்யலாம் சமாதான முயற்சில் ஈபட்டுவரும் உங்கள் நாட்டின் ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொரியாவின் கோலோன் குலோபல் கோபரே~ன் நிறுவனத்தின் தலைவர் ஹெங் வூன் êனுடனான சந்திப்பொன்று புதன்கிழமை (30) அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைக் கூறினார்.
இக்கலந்துரையாடலின் பின்னர் இனங்காப்படாத சிறுநீரக நோய் காணப்படும் பிரதேசங்களுக்கு நீர் சுத்திகரிக்கும் இயந்திரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான பல மில்லியன் ரூபா பெறுமதியான பத்திரத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு கோலோன் குலோபல் கோபரே~ன் நிறுவனத்தின் தலைவரால் கையளிக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த கோலோன் குலோபல் கோபரே~ன் நிறுவனத்தின் தலைவர் 2001ம் ஆண்டு முதல் இலங்கையில் தமது நிறுவனம் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துக் கருத்திட்டங்களை அமைப்பதில் பணியாற்றி வருவதாகவும், அமைச்சர் ஹக்கீமின் அழைப்பின் பேரிலே இங்கு சமூக நலன் உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.
கோலோன் குலோபல் கோபரே~ன் நிறுவனம் காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதலான நீர் வழங்கல் திட்டங்களை அமைக்கும் பணியினை பூர்த்தி செய்திருப்பதுடன் மற்றும் மாத்தறை நீர் வழங்கல் திட்டம் (நான்காவது படிமுறை) தெதுரு ஓயா நீர் வழங்கல் திட்டம் கண்டி கழிவு நீர் முகாமைத்துவத் திட்டம் என்பவற்றின் அமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன். இந்த நிறுவனம் இதற்கு முன்னரும் இலங்கையில் பல்வேறு சமூக நலன்புரிப் பணிகளுக்காக நேசக்கரம் நீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டுகளில் நீர் சுத்திகரிக்கும் இயந்திரங்களை பெற்றுக் கொடுப்பதற்காக தலா 5 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது. வரட்சி நிலவும் பிரதேசங்களுக்கும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்காக 10 மில்லியன் ரூபா பெறுமதியான 3 குடிநீர் பவுசர்களையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கல்முனை பிரதேச மக்களின் நலன்கருதி 3 நாள் கொண்ட வைத்திய முகாமொன்றை நடத்தியிருப்பதோடு கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட களுத்துறை பிரதேச மக்களின்நிவாரண நடவடிக்கைகளுக்காக 10 மில்லியன் ரூபாய்களை ஜனாதிபதியூடாக வழங்கியும் உதவி செய்துள்ளது.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் டீ.எம்.ஜீ.வீ.ஹப்புஆராச்சி, மேலதிகச் செயலாளர்களான ஏ.சீ.எம்.நபீல், எல்.மங்கலிகா, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.நயீமுல்லாஹ் உட்பட அமைச்சின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment