எம்பிலிப்பிட்டிய – கொலன்ன பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 10.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
தீயினால் ஏற்பட்ட வெடிச்சம்பவத்தில் 2 வர்த்தக நிலையங்களும் வீடொன்றும் சேதமடைந்துள்ளதாக ர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் சம்பவத்தில் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மின் ஒழுக்கினால் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment