அம்பாறை மாவட்டத்தில் காளான் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. உள்ளூர் சந்தைகளிலும், வெளிநாட்டு சந்தைகளிலும் காளான் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இதனால் அம்பாறை மாவட்டத்தில் காளான் செய்கையை சிறு தொழிலாக செய்வோரை அடையாளங்கண்டு, அவர்களுக்கான ஊக்குவிப்புக்கள், தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயத் திணைக்களம் வழங்கவுள்ளதாக மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
மஹாஓயா, தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் காளான் செய்கைக்கு ஏற்ற சூழ்நிலை காணப்படுகின்றது.
No comments:
Post a Comment