இலங்கை ரூபாயின் பெறுமதி 3 மாதங்களில் 3 வீத வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கை ரூபா 3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு முழுவதிலும் 2.5 வீதமே ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் 2016 ஆம் ஆண்டு 3.9 வீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இலங்கை வரலாற்றில் ரூபாவின் பெறுமதி கடந்த வாரமே அதிக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி பாதிப்பை ஏற்படுத்தாது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும் இலங்கையின் எதிர்காலம் குறித்து பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி அடையுமாயின் அது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment