வடமாகாண பட்டதாரிகள் மீண்டும் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 1, 2018

வடமாகாண பட்டதாரிகள் மீண்டும் போராட்டம்

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவுள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இன்று காலை 09 மணியளவில் வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.

‘கல்வித் தகுதி கண்துடைப்பா, அநீதியான நியமனத்தை இரத்துச் செய், நியாயமான கோரிக்கையைத் தருவதில் தாமதம் ஏன், பட்டதாரிகளின் உளநலத்தைப் பாதிக்காதே, உரியவர்கள் இருக்க வேறு நபர்கள் எதற்கு, பட்டத்தைப் பெற்றும் வீதியில் வாழ்க்கையா போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment