கோல்டன் பீகொக் விருதைத் திருடிய ஐவர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, May 6, 2018

கோல்டன் பீகொக் விருதைத் திருடிய ஐவர் கைது

காலஞ்சென்ற பிரபல சிங்கள மொழி திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் விருதை திருடியமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஐவர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலஞ்சென்ற லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றவேளை, கடந்த 2 ஆம் திகதி அவருடைய வீட்டிலிருந்து கோல்டன் பீகொக் வாழ்நாள் சாதனையாளர் விருது திருடப்பட்டமை தெரியவந்தது.

இந்நிலையில் குறித்த விருது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது கடந்த 5 ஆம் திகதி கடுவல - கொள்ளுப்பிட்டி வழித்தடத்தில் பயணிக்கும் 177 ஆம் இலக்க பஸ்ஸில் இருந்து திருடப்பட்ட விருது மீட்கப்பட்டது.

இந்நிலையிலேயே விருது திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஐவரைக் கைதுசெய்துள்ளனர்.

இந்த கோல்டன் பீகொக் விருதானது (Golden Peacock Award )கடந்த 1965 ஆம் ஆண்டு புதுடெல்லியில் இடம்பெற்ற இந்திய திரைப்பட விருது வழங்கும் நிகழ்வில் கம்பெரலிய என்ற திரைப்படத்திற்காக லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸிற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment