உணர்வுமிக்க செயற்பாடுகளினால் இந்த ரமழானை அலங்கரிப்போம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 23, 2018

உணர்வுமிக்க செயற்பாடுகளினால் இந்த ரமழானை அலங்கரிப்போம்

இஸ்லாம் உணர்­வு­பூர்­வ­மான மார்க்­க­மாகும். அதனை ஏற்றுக் கொண்­ட­வர்­க­ளையும் உணர்­வுடன் வாழ்­வ­தற்கே அது வழிகாட்டுகின்­றது. அல்­லாஹ்­வுடன் உறவைத் துண்­டிக்­காத நிலையில் வாழ்­ப­வ­னையே உயர்ந்த மனி­த­னாக இஸ்லாம் குறிப்பிடு­கின்­றது. 

தக்வா என்ற உணர்வே மனி­தனைப் புனி­த­னாக்­க­வல்ல உணர்வாகும். அல்லாஹ் புனித ரம­ழானின் மூலம் இதனை மனித சமூ­கத்­துக்கு கொடுத்து உணர்­வுள்ள மனித சமு­தா­யத்தின் உருவாக்­கத்தை எதிர்­பார்க்­கின்றான். அல்­லாஹ்­வுடன் உணர்வுபூர்வ­மான தொடர்பு வைத்­துள்ள ஒரு­வரே உயர்ந்த மனிதன் என இஸ்லாம் குறிப்­பி­டு­கின்­றது.

அல்லாஹ் புனித ரம­ழானை தக்வா எனும் உணர்வைப் பலப்படுத்திக் கொள்­வ­தற்­காக ஏற்­ப­டுத்தித் தந்­துள்­ள­தாக அல்குர்ஆனில் குறிப்­பி­டு­கின்றான்.

இந்த ரம­ழானை சரி­யாகப் பயன்­ப­டுத்­தி­ய­வர்­க­ளினால் மாத்­தி­ரமே தக்வா எனும் உயர்ந்த உணர்வை அடைந்­து­கொள்­ளலாம் என அல்லாஹ் தெரி­வித்­துள்ளான். ரம­ழானை அடைந்த அனை­வரும் தக்­வாவை அடைந்து கொள்­வ­தான உத்­த­ர­வா­தத்தை அல்லாஹ் எங்கும் வழங்­க­வில்லை. ரம­ழானில் புரி­யப்­ப­டு­கின்ற தனிப்­பட்ட அமல்­களும், சமூக செயற்­பா­டு­களும் உணர்­வு­பூர்­வ­மாக அமையும்போதே அல்லாஹ் கூறிய தக்­வாவை இந்த ரம­ழானில் அடைந்­து­கொள்­ளலாம்.

இந்த இலக்கை அடைந்து கொள்­வ­தற்கு எமது ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய செயற்­பா­டு­களும் உணர்வுபூர்­வ­மாக இருக்க வேண்டும். வெறும் சடங்கு, சம்­பி­ர­தா­ய­மாக அமையும் செயற்­பா­டு­க­ளினால் அல்லாஹ் கூறிய இலக்கை அடைய முடி­யாது என்­பது விளக்கம் தேவையில்லாத உண்­மை­யாகும். 

ரம­ழானில் நாம் புரியும் செயற்­பா­டுகள் உணர்­வுள்­ள­தாக அமைய வேண்­டு­மாக இருந்தால், அவை பழக்­க­தோ­ச­மாக அமைந்­து­விடக் கூடாது. நிகழ்ச்சி நிரற்­ப­டுத்­தப்­பட்ட ஒரு இயந்­தி­ர­மாக நாம் மாறிவிடக் கூடாது.

எல்­லோரும் ஸஹ­ருக்கு எழும்­பு­கி­றார்கள். வானொ­லியில் நிகழ்ச்சிகள் செல்­கி­றன. நாமும் எழும்­பு­கிறோம். எல்­லோரும் சுபஹ் தொழு­கைக்­காக பள்­ளிக்குச் செல்­கின்­றார்கள். நாமும் செல்கின்றோம். எல்­லோரும் அல்­குர்­ஆனை ஓது­கின்­றார்கள். நாமும் ஓது­கின்றோம்…… இப்­ப­டி­யாக எமது செயற்­பா­டுகள் தொட­ரு­மாக இருந்தால் உணர்­வற்ற சம்­பி­ர­தாயம் கலந்த செயற்­பா­டு­க­ளா­கவே எமது சகல நட­வ­டிக்­கை­களும் மாறி­விடும்.

நாம் எந்தக் கரு­மத்தை செய்­யும்­போதும், இதனை ஏன் செய்கின்றோம்? எப்­படி செய்ய வேண்டும்? இதனால் என்ன பயன் கிடைக்­கின்­றது? நாம் அமுல்­ப­டுத்தும் முறை­மை­யினால் உரிய பயன் கிடைக்கப் பெறுமா? இந்தப் பயனை கிடைக்­காமல் செய்யும் விட­யங்கள் எவை? அவற்­றி­லி­ருந்து தவிர்ந்து கொள்­வது எவ்­வாறு….? என பல்­வேறு கேள்­வி­க­ளுக்கு விடை காண வேண்டும். அப்­பொ­ழு­துதான் எமது செயலை உணர்வு பூர்­வ­மான செய­லாக மாற்றிக்கொள்ள முடி­கின்­றது.

நாம் நல்­ல­மல்­களை செய்­து­மு­டிக்க வேண்டும் என்றே முயற்சிக்கின்றோம். அவற்றை அல்லாஹ் ஏற்­றுக்­கொள்ளும் விதத்தில் செய்து முடிக்­கின்­றோமா? என பார்க்கத் தவ­று­கின்றோம். அல்லாஹ் ஏற்­றுக்­கொள்­ளும்­படி செய்யும் செயல்­க­ளி­லேயே தக்வா கிடைக்கப் பெறு­கின்­றது.

எம்மை அடைந்­துள்ள ரமழான் மாதத்தில் புரியும் இபா­தத்­துக்­களை நாம் உணர்­வுள்­ள­தாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஸஹர் செய்யும் நட­வ­டிக்கை, எமது நோன்பு, பகல் நேர செயற்­பா­டுகள், இப்தாருடைய நிகழ்வு, இரவுத் தொழுகை மற்றும் ஏனைய இபாதத்துக்கள், மனி­தர்­க­ளு­ட­னான உற­வுகள், சமூக மேம்­பாட்டு நட­வ­டிக்­கைகள், எமது தொழில் நட­வ­டிக்­கைகள் மற்றும் குறிப்­பாக எம்மை விட்டுச் செல்லும் ஒவ்­வொரு பொழு­துகள்…. போன்ற அனைத்து விட­யங்­களும் உணர்வு பூர்­வ­மா­ன­தாக காணப்படுகின்றதா? என்­பது குறித்து அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். 

நாம் செய்யும் செயல்கள் அல்லாஹ் அனு­ம­தித்­ததா? அவற்றை இஸ்லாம் சொன்ன பிர­காரம் செய்­கின்­றோமா? நாம் செய்யும் பிரகாரம் செய்தால் அல்­லாஹ்வின் அன்பு கிடைக்­குமா...? என ஒவ்வொரு செய­லையும் நாம் கவ­ன­மாகச் செய்யும் போதே அது உணர்­வு­பூர்­வ­மா­ன­தாக மாறு­கின்­றது.

ரம­ழானில் புரி­கின்ற தனிப்­பட்ட வணக்க வழி­பா­டு­களும், சமூக இபா­தத்­துக்­களும் இப்­ப­டித்தான் பார்க்­கப்­பட வேண்டும். நாம் எதனைச் செய்­தாலும் இஹ்­லா­ஸுடன் செய்­வதும், இஸ்­லாத்­துக்கு முர­ணில்­லாத விதத்தில் செய்­வதும் பிர­தா­ன­மா­னது.

உணவு தவிர்க்­கப்­படும் மாதம் என்று ரமழான் கூறப்­பட்­டாலும், இந்த மாதத்தில் தான் அதி­க­மாக உணவு வீண்­வி­ரயம் செய்யப்படுகின்றது. ரமழான் இரவு வணக்­கத்­திற்­கான மாதம் என்று கூறப்­பட்­டாலும், அதி­க­மா­னோ­ரினால் இரவின் புனிதம் கெடும் வித்த்தில் துஷ்­பி­ர­யோகம் செய்யும் நிகழ்­வுகள் அதிகம் இந்த மாதத்தில் தான் இடம்­பெ­று­கின்­றன. 

ரமழான், பாவங்கள் அதிகம் இடம்­பெ­றாத மாதம் என்று கூறப்படுகின்­றது. எமது சூழலில் நோன்பு நேரத்தைக் கழிப்­ப­தற்கு வானொ­லியில் சினிமாப் பாடல் கேட்­பது, தொலைக்­காட்­சியில் சினிமா, நாடகம், கார்ட்டூன் போன்­றவற்றைப் பார்ப்­பது என அதிகமான பாவ­மான விட­யங்­களில் ஈடு­ப­டு­வதும் இம்மாத்த்தில்தான்.

ரமழான் இஸ்­திஃபார், தௌபாவின் மாதம் என்று கூறு­கின்றோம். கிளிப்­பிள்ளை போன்று தான் செய்த தவறை உண­ரா­த­வர்கள் என்பதை இம்­மா­தத்­தி­லேயே நாம் வெளிக்­காட்­டு­கின்றோம். கோபம் வராத மாதம், பொறு­மையின் மாதம் எனக் கூறு­கின்றோம். பசிவந்தால் பத்தும் மறக்கும் என்ற கொள்­கையை இம்­மாத்த்தில் தான் நாம் வெளிப்­ப­டுத்­து­கின்றோம்.

தான தர்­மத்­துக்­கான மாதம் என்று கூறு­கின்றோம். கணக்கெடுத்துக் கொடுக்க வேண்­டிய ஸக்­காத்தை அதிக நன்மை கிடைக்கும் என்ற எதிர்­பார்ப்பில், ஸத­கா­வாக இம்­மா­தத்­தி­லேயே பங்­கீடு செய்­கின்றோம். ரமழான், இராத் தொழு­கையின் மாதம் என்று கூறு­கின்றோம். தொழுகை தொடர்பில் அதிக சர்ச்­சைகள் இம்­மா­தத்தில் தான் எழு­கின்­றன.

ரமழான், யுத்தம் செய்த மாதம் என்று பத்ரை ஞாபகப்படுத்துகின்றோம். ஆனால், பெரும்­பா­லா­ன­வர்கள் பசியுடன் அதி­க­மாக தூக்­கத்தில் நாட்­களை கடத்­து­வது இம்மாதத்திலாகும். ரமழான், ஏழையின் பசியை உணரும் மாதம் எனச் சொல்­கின்றோம். பிச்சை கேட்டு அதி­க­மானோர் வெளிப்படுவதும் இம்­மா­தத்தில் தான்.

இப்­ப­டி­யாக நாம் செய்யும் செயல்கள் பற்றி உணர்­வின்றி செயற்பட்டுக் கொண்­டி­ருக்­கின்றோம். இஸ்லாம் செய்யுமாறு கூறும் எந்தவொரு நடவடிக்கையும் பெறுமதியான விளைவுகளையே வெளிப்படுத்தும். அதற்கு அவை உரிய முறையில் செய்யப்பட வேண்டும். முறைமை மாறிச் செய்யப்படும் நடவடிக்கைகளினால், உரிய பலன் கிடைப்பதில்லையே என இஸ்லாத்தைக் குறை கூறுவது அர்த்தமற்ற செயலாகும்.

எனவே, எம்மை அடைந்துள்ள இந்த ரமழானை எமது வாழ்க்கையின் திருப்பு முனைக்கான ஒரு புதிய ரமழானாகப் பார்ப்போம். தக்வா எனும் உணர்வை நிரப்பிக் கொள்ளும் ஒரு ரமழானாக இந்த ரமழானை கழிப்பதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக? 

Vidivelli

No comments:

Post a Comment