நேர முகா­மைத்­துவம் - News View

Breaking

Wednesday, May 23, 2018

நேர முகா­மைத்­துவம்

நேரம் என்­பது எமது வாழ்வில் பெறு­மதி வாய்ந்த ஒன்­றாகக் காணப்ப­டு­வதால் நேரம் பொன் போன்­றது எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் நேர­மா­னது வாழ்க்­கை­யாகும். அதா­வது வாழ்க்கை நேரத்தின் அடிப்­ப­டை­யில்தான் இயங்­கு­கி­றது. ஒரு மனிதன் காலை எழும்­பு­வ­தி­லி­ருந்து இரவு தூக்­கத்­திற்கு செல்லும்வரை அனைத்து செயற்­பா­டு­க­ளிலும் நேரம் செல்­வாக்கு செலுத்­து­கி­றது. 

நேரத்தின் பெறு­ம­தியை எம்மால் மதிப்­பிட முடி­யாது. அது­போன்று நிறுத்தி வைக்­கவோ திருப்­பிப்­பெ­றவோ முடி­யாது. நேரம் இழந்­தது இழந்­த­தா­கவே இருக்கும். மீண்டும் அதனைப் பெற­மு­டி­யாது. இதனை அறிஞர் இவ்­வாறு கூறு­கின்றார், நேரத்­தைப்­பி­டிக்க வேண்டு­மெனில் அது உன்னை எதிர்­கொண்டு வரும்­போது பிடித்துக்கொள் கடந்­தபின் பிடிக்­க­மு­டி­யாது.

நேரம் என்­பது நேர்­கோட்டில் இயங்­கு­கின்­றது. அது ஒரு போதும் ஆரம்­பப்­புள்­ளியை சந்­திக்­காது. நேரத்தை வீண­டிப்­பது வாழ்க்கையை வீண­டிப்­ப­தற்கு சம­னாகும். நேர­வி­ரயம் சமூக சீர்கேட்டை விளை­விக்கும். எனவே நேரத்தின் முக்­கி­யத்­து­வத்தை அறிந்து அதனை முகா­மைத்­துவம் செய்து செயற்­பட வேண்டும். ஒவ்­வொரு தனி­ந­ப­ருக்கும் தமது இலக்கை அடை­வ­தற்கு நன்கு திட்ட­மிடல் அவ­சியம். அத்­திட்­ட­மி­ட­லா­னது நேரத்­துடன் பின்னிப்பிணைந்து காணப்­ப­டு­வதால் நேரத்தை முகாமை செய்யவேண்­டிய தேவை­யுள்­ளது.

காலமும் நேரமும் எம்­ம­னி­த­ருக்­கா­கவும் காத்­தி­ருப்­ப­தில்லை. நாம் பயன்­ப­டுத்­தி­னாலும் பயன்­ப­டுத்­தா­விட்­டாலும் கழிக்­கி­ன்ற ஒவ்வொரு பொழுதும் நொடியும் நிச்­ச­ய­மாகத் திரும்பி வரப்போவதில்லை. அல்லாஹ் அல்­குர்­ஆனில் காலத்­தி­னதும் நேரத்தி­னதும் முக்­கி­யத்­துவம் பற்றி இவ்­வாறு கூறு­கின்றான். 'காலத்தின் மீது சத்­தி­ய­மாக' (103:01). நபி (ஸல்) அவர்­களும் நேரத்தை வீண­டிக்­காது பய­னுள்ள முறையில் கழிக்க வேண்டும் என குறிப்பிட்­டுள்­ளார்கள்.

நேர முகா­மைத்­துவம்
நேர முகா­மைத்­துவம் என்­பது ஒரு விட­யத்தை செய்­வ­தற்குத் திட்டமி­டப்­பட்ட செயற்­றிட்­ட­மாகும். இன்று நாம் வாழும் தொழி­நுட்ப உலகில் நேரம் விரை­வாக சென்று கொண்­டி­ருக்­கி­றது. மனி­தர்கள் தங்கள் நேரங்­களை செல­வி­டு­வதில் கவ­ன­யீ­ன­மா­கவும் தடுமாறியும் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இன்று மனிதன் எதற்­கெ­டுத்­தாலும் தனக்கு நேர­மில்லை அல்­லது நேரம் போதாது என்­கின்றான். நேரத்தைக் காட்­டிலும் அவ­னது வேலைகள் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றன. இவ்­வாறு கூறக்காரணம் நேரத்தை திட்­ட­மிட்டு அதனை முகா­மைத்­துவம் செய்து இயங்­கா­ததன் விளை­வாகும்.

நேரம் உண்­மையில் பெறு­ம­தி­மிக்­கது விலை­ம­திக்க முடி­யாது. பத்தரை மாற்று பசும் பொன் கூட மனி­தனின் ஆயுளில் ஒரு வினாடிக்கும் சம­னா­காது. கால­நேரம் அவ்­வ­ளவு பெறு­மதி வாய்ந்தது. உச்­ச­ப­யனை அடையும் வரையில் அதனை ஒழுங்­காகத் திட்­ட­மிட்டு செயற்­ப­டுத்த வேண்டும்.

பொது­வாக பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களைப் பொறுத்­த­வ­ரையில் ஒவ்­வொ­ரு­வரும் நேரம் போதாது, ஒரு வேலை­யையும் ஒழுங்­காகச் செய்­ய­மு­டி­யாது அதற்கு நேர­மில்லை என்று சொல்லிக் கொண்டிருக்­கின்­றனர். அது தவ­றா­ன­தாகும். ஒவ்­வொ­ரு­வரும் நேரத்தை ஒழுங்­காக முகா­மைத்­துவம் செய்து செயற்­பட்டால் அவனது இலக்கை சரி­வர நிறை­வேற்­றிக்­கொள்ள முடியும். சிலர் அவர்­க­ளது இலக்கை அடைந்து கொள்­வ­தற்­காக ஒழுங்­காக நேரத்தை முகாமை செய்து செயற்­ப­டு­கின்­றனர். 

அவர்­க­ளைப்­பார்த்து ஏனையோர் அவ­னுக்கு நேரம் அதிகம் அவ­னது அனைத்து வேலை­க­ளையும் நேரத்­துக்கு செய்து விடு­கிறான் எனப் பொறா­மைப்­ப­டு­வ­துண்டு. அது பொறா­மைப்­பட வேண்­டிய விஷயமல்ல. கவ­லைப்­பட வேண்­டிய ஒன்­றாகும். அவன் அவ­னது இலக்கை அடைந்­து­கொள்ள நேரத்தின் முக்­கி­யத்­து­வத்தை அறிந்து அதனை முகா­மைத்­துவம் செய்து அதன்­படி செயற்­ப­டு­கின்றான்.

பொது­வாக பலர் நேரங்­களை வீண்­வி­ரயம் செய்­கின்­றனர். ஓய்வு நேரங்­களை தேவை­யற்ற விட­யங்­களில் செயற்­ப­டுத்­து­வது. இது தொழி­நுட்ப யுக­மாகக் காணப்­ப­டு­வதால் தொழி­நுட்ப சாதனங்களில் தமது நேரங்­களை செல­வு­செய்­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

பொது­வாக, ஒரு பல்­க­லைக்­க­ழக மாண­வனைப் பொறுத்­த­வ­ரையில் இவர்­க­ளுக்கு பல கல்­வி­சார்ந்த செயற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. அது­போன்று தன்னைத் தானே வளர்த்­துக்­கொள்ள சில ஆளுமை செயற்­பா­டு­களும் உள்­ளன. ஆரம்­பத்தில் கூத்து, கேளிக்கை விளையாட்டு என்­ப­வற்றில் நேரத்தை செலவு செய்­து­விட்டு இறுதியில் தாங்­க­ளது கல்வி செயற்­பா­டு­களை நிறை­வேற்ற சிரமப்ப­டு­கின்­றனர். நேரம் போதாது என்று மன­அ­ழுத்தம் கொள்வதையும் காண­மு­டி­கின்­றது. அவ்­வாறு ஏற்­ப­டாமல் இருக்க நேரத்தை ஒழுங்­காகத் திட்­ட­மிட்டு முகா­மைத்­துவம் செய்து செயற்பட்டால் எந்தப் பிரச்­சி­னையும் ஏற்­ப­டாது.

ஒரு மாணவன் தனது அன்­றாட வேலை­களை பின்­வரும் வகை­களில் பிரித்து நேரத்தை எங்கு? எப்­போது? எவ்­வாறு? என்று திட்­ட­மிட்டு செயட்­ப­டுத்த வேண்டும்.

1) முக்­கி­ய­மான அவ­ச­ர­மான வேலை.
2) முக்­கி­ய­மான அவ­ச­ர­மற்ற வேலை.
3) முக்­கி­ய­மற்ற அவ­ச­ர­மான வேலை.
4) முக்­கி­ய­மற்ற அவ­ச­ர­மற்ற வேலை.

முக்­கி­ய­மான அவ­ச­ர­மான வேலை எனும்­போது வணக்க வழிபாடுகள் அதா­வது, தொழு­கைக்­கு­ரிய நேரம் வந்­து­விட்டால் இதை நிறை­வேற்­று­வது, பசி­வந்தால் நேரத்தில் சாப்­பி­டு­வது, பாடத்திற்கு உரி­ய­நே­ரத்தில் செல்­வது இவற்றை குறிப்­பி­டலாம்.

முக்­கி­ய­மான அவ­ச­ர­மற்ற வேலை எனும்­போது, ஒருவன் தன்னை உரு­வாக்கிக் கொள்ள தன் ஆளுமை அறி­வு­களை வளர்த்துக் கொள்ளல், தன் தொழி­லுக்குத் தேவை­யான தகு­தி­களை வளர்த்துக் கொள்ளல். இவைகள் முக்­கி­ய­மான வேலைகள். ஆனால் அவசரமில்லா­தவை. ஆனால் கட்­டாயம் ஒரு மனிதன் இதற்­கு­ரிய நேரங்­களை ஒதுக்­க­வேண்டும்.

முக்­கி­ய­மற்ற அவ­ச­ர­மான வேலை எனும்­போது திடீ­ரென வரும் தொலை­பேசி அழைப்­புக்கள், திடீ­ரென சந்­திக்க வரு­ப­வர்கள் இவைகள் அவ­ச­ர­மா­ன­வை­கள்தான். ஆனால் நமக்கு முக்கியமற்றவை­க­ளாக இருக்­கலாம். இதற்கு நாம் நேரம் ஒதுக்க வேண்டி இருக்­கி­றது. நீங்கள் முக்­கி­ய­மான அவ­ச­ர­மான வேலைகளை செய்து கொண்­டி­ருக்­கும்­போது இவைகள் வந்தால் இவை­க­ளுக்­காக வேறொரு நேரத்தை ஒதுக்­கலாம்.

முக்­கி­ய­மற்ற, அவ­ச­ர­மற்ற வேலை எனும்­போது நீர் அருந்த சென்று தேவை­யில்­லாமல் பேசிக்­கொண்டு நேரம் பிந்தி வரல். இவைகளுக்கா­கவே அதி­க­மான நேரங்­களை செல­வி­டு­கிறோம் என்று ஆய்­வுகள் சொல்­கின்­றன. இதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும் ஆனால் நேரம் வீண்­வி­ரயம் ஆகாமல் பார்த்­துக்­கொள்ள வேண்டும்.
மேலே குறிப்­பி­டப்­பட்ட முறையில் நேரங்­களை திட்­ட­மிட்டு செயற்படு­வதன் மூலம் எம் அனைத்து செயற்­பா­டு­க­ளையும் வெற்றியின் பக்கம் திசை திருப்­ப­மு­டியும்.

ஒருவர் தூங்கி எழும்­பி­யதும் அல்­லாஹ்வுக்­கு­ரிய கட­மை­களை சரிவர செய்து விட­வேண்டும். பிறகு கொஞ்­ச­நேரம் இறைசிந்தனையில் இருக்­கலாம். அன்று செய்யும் வேலை­களை எழு­தி­வைத்து அவற்­றுக்­கேற்றாற் போல் செயற்­ப­டலாம். ஓய்வு கிடைக்கும் சந்­தர்ப்­பங்­களில் வேறு­வி­ட­யங்­களில் சிறிது கவனம் செலுத்­தலாம். செய்­தி­களை பார்ப்­பது அல்­லது புத்­த­கங்­களை வாசிப்­பது போன்ற விட­யங்­களில் ஈடு­ப­டலாம். 

நாம் ஒரு வேலையை செய்­யும்­போது இடையில் சிறிது ஓய்வு எடுப்பது அவ­சியம். காரணம் மனித உள்ளம் தொடர்ந்து ஒரு வேலையில் ஈடு­பட்டால் மன அழுத்தங்­க­ளுக்கு உள்­ளா­வதை நாம் அறிவோம். மன அழுத்­தங்கள் ஏற்­பட்டால் எமது வேலைகள் பாதிப்படையும். ஆகவே தேவை­யான சந்­தர்ப்­பங்­களில் ஓய்வை எடுத்­துக்­கொள்ள வேண்டும்.

இது நவீன காலம் என்­பதால் முக்­கி­ய­மாக Smart Phone மற்றும் Internet பாவ­னை­களில் அதிக கவனம் செலுத்­து­கிறோம். இன்று அதற்கு அடி­மை­யாக இருக்­கின்றோம். நாள் பூரா­கவும் தூக்­க­மில்­லாமல் இதி­லேயே மூழ்­கி­யி­ருக்­கின்றோம். குறிப்­பிட்ட நேரங்­களை அதற்காக ஒதுக்கி வைத்­துக்­கொண்டால் மிகச்­சி­றப்பு அந்த நேரத்தை தவிர வேறு நேரங்­களில் அதனுள் நுழை­யாமல் இருத்தல்.

நேர முகா­மைத்­து­வத்தில் இஸ்லாம் வெகு கண்­டிப்­பாக உள்­ளது. நேர முகாமைத்­து­வத்தில் நபி (ஸல்) அவர்­களை விட வேறொ­ருவர் எமக்கு முன்­மா­தி­ரி­யாகத் தேவை­யில்லை எனத் துணிந்து கூறும் அள­வுக்கு அவர்கள் சொல்­லாலும் செய­லாலும் நேர முகா­மைத்­து­வத்தை செய்து காட்­டி­யுள்­ளார்கள்.

நேர­மு­கா­மைத்­துவம் என்­பது வினைத்­திறன், செயற்­றிறன் அல்­லது உற்­பத்­தித்­தி­றனை அதி­க­ரிக்கும் நோக்­குடன் ஒரு குறிப்­பிட்ட செயற்­பாட்டை செய்து முடிப்­ப­தற்கு செல­வி­டப்­படும் நேரத்­தினை திட்­ட­மிட்டு கட்­டுப்­ப­டுத்தும் செயன்­முறை அல்­லது கலை எனக்கூறலாம்.

சிறந்த நேர­மு­­காமைத்­து­வத்தை பேணு­வ­தற்­கான சில வழி முறைகள்:

01) செய்ய வேண்­டி­யதை எழுதி வைத்தல்.

02) எழு­தி­ய­வற்றை முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் நிரற்­ப­டுத்தல்.

03) வாராந்த திட்­டத்தை வகுத்தல்.

04) தொடர்ச்­சி­யான முன்­னேற்­றத்­திற்கு சரி­யாக நேரத்தை ஒதுக்குதல்.

05) நாளாந்த செயற்­பா­டு­களில் எதனை கைவி­டு­வது என சிந்­தித்தல்.

06) நேரத்தை வீணாக்­குதல், தீய­ப­ழக்­கங்­களை அடை­யாளம் காணல்.

07) நாளாந்த கட­மை­களை உரிய முறையில் நிறை­வேற்றல்.

08) நன்கு திட்­ட­மிட்டு வேலையை ஆரம்­பித்தல்.

09) ஒதுக்­கப்­பட்ட காலத்­துக்­குள்ளே வேலையை செய்து முடிக்க முயற்­சித்தல்.

10) தேவை­யற்ற உரை­யா­டல்­களை தவிர்த்தல்.

11) நேரத்தை முகா­மைத்­துவம் செய்தல்.

மேலே குறிப்­பி­டப்­பட்ட வழி­மு­றை­களை பின்­பற்றி நடந்தால் நேரமின்மை என்ற விமர்­சனம் ஓய்­வ­டையும். ஒழுங்­காக எமது இலக்கை அடைந்து கொள்­ளலாம்.

நேரத்தின் பெறு­மதி
காலையில் ஒவ்­வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்­கிற்கு 100,000 ரூபாய் வைப்­பி­டப்­ப­டு­கின்­றது என வைத்­துக்­கொள்­ளுங்கள். ஆனால் அடுத்த நாள் மிகுதி எதுவும் இல்­லாமல் போகி­றது. ஒவ்வொரு நாள் மாலையும் நீங்கள் பயன்­ப­டுத்­தாமல் விட்ட பணம் நீக்­கப்­ப­டு­கின்­றது. 

இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் நீங்கள் என்ன செய்­வீர்கள்? கட்­டாயம் ஒவ்­வொரு சதத்­தையும் பயன்­ப­டுத்த முயற்­சிப்­பீர்கள். அதுபோல் தான் நாம் ஒவ்­வொ­ரு­வரும் நேரம் எனும் வங்­கியைக் கொண்டுள்ளோம். ஒவ்­வொரு நாளின் தொடக்­கத்­திலும் அதற்கு 86400 வினா­டிகள் வைப்­பி­லி­டப்­ப­டு­கின்­றன. ஒவ்­வொரு நாள் முடி­விலும் அவை நீக்­கப்­ப­டு­கின்­றன. 

முன்­னைய நாளி­லி­ருந்த எந்த வினா­டியும் அடுத்த நாளுக்குகொண்டு செல்­லப்­ப­டு­வ­தில்லை. ஒவ்­வொரு நாளும் புதிய வினா­டிகள் வைப்­பி­லி­டப்­பட்டு அந்­நாளின் முடிவில் நீக்­கப்­படும். அவை அப்­ப­டியே நீங்கி விடு­கின்­றன. அதை நாம் இழந்து விடுகின்றோம். நேரம் ஒடிக்­கொண்டே இருக்­கி­றது. ஆகவே அதனை பெரு­ம­ளவு பய­னுள்ள வழி­க­ளிலே அதனை செலவு செய்ய வேண்டும்.

நேரத்தின் பெறு­ம­தியை பின்­வரும் சந்­தர்ப்­பங்­களை சந்தித்தவர்களிடம் கேட்­கலாம்.

1) ஒரு வரு­டத்தின் பெறு­ம­தியை பரீட்­சைக்கு தோற்­றிய மாணவனிடம் கேட்­கலாம்.

2) ஒரு மாதத்தின் பெறு­ம­தியை ஒரு கர்ப்­பிணிப் பெண்­ணிடம் கேட்கலாம்.

3) ஒரு நிமி­டத்தின் பெறு­ம­தியை பஸ்­வண்­டியைத் தவறவிட்டவனிடம் கேட்­கலாம்.

4) ஒரு செக்­கனின் பெறு­ம­தியை விபத்தில் தப்­பி­ய­வ­னிடம் கேட்கலாம்.

5) நுண்­ணொ­டியின் பெறு­ம­தியை ஒலிம்­பிக்கில் தங்­கப்­ப­தக்­கத்தை தவ­ற­விட்­ட­வ­னிடம் கேட்­கலாம்.

அதனால் நாம் எமது ஒவ்­வொரு விநா­டி­யையும் பய­னுள்­ள­தாக அதன் பெறு­ம­தியை உணர்ந்து நடக்க வேண்டும்.

நேரத்தின் பெறு­ம­தியை உணர்ந்து அதனை நன்கு திட்­ட­மிட்டுப் பயன்­ப­டுத்த வேண்டும். அதனை வீணடிக்­கக்­கூ­டாது என்பதையெல்லாம் உணர்த்தும் பொருட்டு காலத்தின் மீது அல்லாஹ்­த­ஆலா சத்­தி­ய­மிட்டுக் கூறு­கின்றான். காலத்தின் மீது சத்தி­ய­மாக (103:01), இரவின் மீது சத்­தி­ய­மாக அது மூடிக்கொள்ளும்போது பகலின் மீது சத்­தி­ய­மாக அது வெளி­யா­கிய போது (92:01-02,) முற்­பகல் மீது சத்­தி­ய­மாக (93:01) என புனித அல்குர்ஆனில் கூறப்­பட்­டுள்­ளது.

காலத்தை சரி­வர முகா­மைத்­துவம் செய்­வது தனி­ம­னி­தனின் பொறுப்­பாகும். அது­பற்றி மறு­மையில் விசா­ரிக்­கப்­படும். ஒவ்வொருவரும் தனது ஆயுட்­கா­லத்தை கழித்­த­மு­றை­பற்றி அல்லாஹ்­விடம் சரி­யாக கணக்குக் காட்ட வேண்டும். மனி­த­வாழ்வு மிக மிகக் குறை­வா­னது. இக்­கு­று­கிய வாழ்­நா­ளுக்­கா­கத்தான் மனிதன் மறு­மைக்­காக சம்­பா­திக்க வேண்டும், சேமிக்க வேண்டும். இவை அனைத்­துக்­கு­மி­டையில் இவ்­வு­லக தேவை­க­ளையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

உமது ஆயுள் எண்­ணப்­ப­டக்­கூடிய சில மூச்­சுகள், உம்­மி­லி­ருந்து ஒரு மூச்சு சென்ற போதெல்லாம் ஆயுளில் ஒரு பகுதி உமக்கு குறைந்துவிடும் என ஒரு அரேபிய கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை நமதுவேலைகளை திட்டமிட்டுக் கொண்டு செயற்படவேண்டும்.

ஒவ்வொருவரும் தனது பொன்னான நேரத்தை வீணடிக்காது. அதனை பயனுள்ள முறையில் கழிக்க வேண்டும். நிறைவேற்ற வேண்டிய நிறைய விடயங்களை அப்படியே வைத்துவிட்டு ஏதேதோ உருப்படியற்ற விடயங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடித்த பின் இதற்கு நேரமில்லை அதற்கு நேரமில்லை எனக்கூறுவதில் அர்த்தமில்லை.

ஒவ்வொருவருக்கும் நேரமானது அளித்துள்ள ஓர் அமானிதம். அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்வது அவரவர் கையிலுள்ளது. இதன் மூலமே நேர அமானிதம் பேணப்படுகின்றது. நேரமுகாமைத்துவம் செய்யாதவர் மொத்தத்தில் தன்னைத்தானே ஒழுங்குபடுத்தாதவர்.

எனவே, நேரமுகாமைத்துவம் என்பது என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? பெறுமதி என்ன? அதனை எவ்வாறு முகாமைத்துவம் செய்ய வேண்டும், என்று இக்கட்டுரை மூலம் தெளிவு ஏற்பட்டிருக்கும். ஒவ்வொருவரும் இதன் பெறுமதியை உணர்ந்தால் நேரமில்லை என்ற ஒரு சப்தத்தை கேட்கமுடியாது. எனவே நேரம் வாழ்க்கையாகும். அதனை மனதில் நிறுத்தி நேரத்தை வீணடிக்காது பயனுள்ளமுறையில் அதனை முகாமைத்துவம் செய்து எமது இலக்கினை அடைந்து கொள்வோம்.

பீ.எப்.ருக் ஷானா
மூன்றாம் வருடம்
தென் கிழக்கு பல்கலைக்கழகம்
Vidivelli

No comments:

Post a Comment