மாணவர்கள் மத்தியில் தீவிரமாகப் பரவத் தொடங்கிய சின்னம்மை நோய் காரணமாக ரஜரட்டைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மூடப்பட்டுள்ளது.
ரஜரட்டைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீட மாணவர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக சின்னம்மை நோய்த் தொற்று தீவிரமாக பரவி வருகின்றது.
இந்நிலையில் இந்நோய் பல்கலைக்கழகத்தின் ஏனைய பீட மாணவர்களையும் தாக்கக் கூடும் என்ற அச்சம் காரணமாக விவசாய பீடம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து விவசாய பீடத்தின் மாணவர்கள் நேற்று மாலை தங்கள் விடுதிகளிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளதுடன், அனைவரும் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்லத் தொடங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment