அதிகளவிலான அடையாளம் காணப்படாத பிரேதங்கள் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ளதனால் தமது கடமைகளைச் செய்தவற்கு இடையூறுகள் ஏற்படுவதாக நுகேகொடை பிரிவின் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பல்வேறு வைத்தியசாலைகளில் பிணவறை வசதிகள் இல்லாமையினாலும் பிணவறைகளில் குளிர் அறைகள் இல்லாமையினாலும் அடையாளம் தெரியாத பிரேதங்களை வைத்தியசாலைகளில் ஏற்க மறுப்பதனாலும் தங்களின் கடமையை செய்வதற்கு இடையூறுகள் ஏற்படுவதாகவும் நுகேகொடை பிரிவின் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹோமாகமை பிரதான வைத்தியசாலையில் பிணவறை சிறிதாக உள்ளதாகவும் மேலும் அதன் குளிரூட்டிகள் பழுதடைந்துள்ளதனால் அடையாளம் காணப்படாத பிரேதங்களை ஏற்க மறுப்பதாகவும் அவிசாவளை பிரதான வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத பிரேதங்களை வைக்கப்பட்டுள்ளதனால் மேலதிகமாக வைப்பதற்கு இட வசதி போதாது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு தெற்கு போதனா (களுபோவில) வைத்தியசாலையிலும் அதேபோன்று ஹொரணை மற்றும் முல்லேரியாவ வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத பிரேதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதனால், தற்போது கிடைக்கப்படும் அடையாளம் காணப்படாத பிரேதங்களை ஏற்க மறுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதுக்கை, சாலாவை, அதுருகிரியை மற்றும் நவகமுவை வைத்தியசாலைகளில் பிணவறை வசதிகள் இல்லாததனால் இந்த வைத்தியசாலைகளில் இருந்து சேகரிக்கப்படும் பிரேதங்களும் சுற்றியுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுவதனால் இந்த நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் இதனால் இதற்கு துரிதப்படுத்தப்பட்ட மாற்று வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment