அல்ஜஸீரா வௌிப்படுத்திய ஆட்ட நிர்ணயம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை விசாரணை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 31, 2018

அல்ஜஸீரா வௌிப்படுத்திய ஆட்ட நிர்ணயம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை விசாரணை

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் அல்ஜஸீரா அலைவரிசை வெளியிட்ட ஆவணப்படம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதான நிறைவேற்று அதிகாரியான டேவிட் ரிச்சட்சன் குறிப்பிட்டார்.

லண்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

காலி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியொன்றில் பணத்திற்காக ஆடுகளத்தின் தன்மையை மாற்றி, ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமை தொடர்பான ஆவணப்படத்தை அல்ஜஸீரா அலைவரிசை வெளியிட்டது.

காலி சர்வதேச விளையாட்டரங்கின் உதவி முகாமையாளரான தரங்க இந்திக்க மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் தரிந்து மென்டிஸ் ஆகியோர் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக இந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டது.

இது தொடர்பில் தீவிரமான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதான நிறைவேற்று அதிகாரியான டேவிட் ரிச்சட்சன் தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் நடைபெற்ற சில போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment