சுனில் ஜயவீரவின் 'தடகளப்போட்டி சட்டவிதிகள் 2018-2019' புத்தக வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 31, 2018

சுனில் ஜயவீரவின் 'தடகளப்போட்டி சட்டவிதிகள் 2018-2019' புத்தக வெளியீடு

இலங்கை தடகளப் போட்டி நிர்வாகத்தினால் மிகத் திறமைவாய்ந்தவரான கல்வியமைச்சின் விசேட விளைளயாட்டுத்துறை ஆலோசகரும் இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுனில் ஜயவீரவால் ‘தடகளப்போட்டி சட்டங்கள் 2018-2019’ என்னும் பெயரில் புத்தகமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி கல்வி மற்றும் விளையாடடுத்துறை முன்னாள் சிரேஷ்ட ஆசிரிய ஆலோசகர் பீ. எல்.எஸ். சம்சனுடன் இணைந்து எழுதப்பட்ட “தடகளப் போட்டி சட்டவிதிகள் 2018-2019 நூல் வெளியீட்டு விழா கொழும்பு கால்பந்தாட்ட இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதுவரை காலமும் ஆங்கில மொழியில் மாத்திரம் காணப்பட்ட தடகளப் போட்டி சட்டவிதிகள் இலகு சிங்கள மொழியில் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியவகையில் இப்புத்தகத்தை சுனில் ஜயவீர, பீ. எல்.எஸ். சம்சன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

சர்வதேச தடகள போட்டிகள், தடகளப் போட்டிகளுக்கான சட்டவிதிகள், ஓட்டப்போட்டிகள் மலையேறும் போட்டிகள், டிரேல் ஓட்டப்போட்டி, உலகசாதனை, அதிகாரிகள் தொழில்நுட்ப தரவுகள் மற்றும் சுற்றுப்பாதை தயாரிக்கும் கணிப்பு- ஒரு ஓட்டப்பாதை தொடர்பான சட்டவிதிகள் இப்புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தடகளப் போட்டியாளர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், விளையாட்டு ஆசிரியர்கள் போன்று தடகளப் பொட்டி நடுவர்கள் தெரிவு செய்யும் பரீட்சைக்கு முகம் கொடுப்பவர்களுக்கும் இப்புத்தகம் உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment