அமெரிக்க தயாரிப்புகள் மீதான இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்திய சீனா - News View

About Us

About Us

Breaking

Monday, April 2, 2018

அமெரிக்க தயாரிப்புகள் மீதான இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்திய சீனா

சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை டிரம்ப் கூட்டியுள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 128 பொருட்களுக்கான இறக்குமதி வரியை சீனா அதிகரித்துள்ளது.

“மேக் அமெரிக்கா கிரேட் அகைன்” (மீண்டும் அமெரிக்காவை பெருமைமிக்கதாக மாற்றுவோம்) என்ற வாக்குறுதியுடன் அதிபரான டிரம்ப், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை சமீபத்தில் உயர்த்தினார்.

இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவிகிதமும், அலுமினியம் மீது 10 சதவிகிதமும் வரி அதிகரித்து அவர் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியையும் உயர்த்தப்போவதாக மிரட்டி வருகிறார்.

டிரம்ப்பின் இந்த திடீர் வரி உயர்வுக்கு சீனா அதிருப்தி தெரிவித்தது. இதனை அடுத்து சில நாட்களுக்கு முன்னதாக, அமெரிக்க நிறுவனங்களால் தயாரிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமையை திருடி போலியாக பொருட்கள் தயாரிப்பதற்கு சீனா உதவி செய்வதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான வரியை உயர்த்துவது குறித்து டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் மூலம் 30 பில்லியன் முதல் 60 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சீனாவுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பன்றி இறைச்சி, ஆப்பிள் மற்றும் உலோகப்பொருட்கள் போன்ற 128 பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை கூட்ட சீனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொருளாதார இழப்புகளை சரிகட்டவே இந்த வரி உயர்வு என சீனா தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment