கிழக்கில் பச்சை மிளகாய் விலையில் பாரிய வீழ்ச்சி - News View

About Us

About Us

Breaking

Monday, April 30, 2018

கிழக்கில் பச்சை மிளகாய் விலையில் பாரிய வீழ்ச்சி

கிழக்கில் பச்சை மிளகாயின் விலை என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளதால் ஈடுசெய்முடியாத நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 20 ரூபாவாக காணப்படுகின்றது. இவ் விலை தொடரச்சியாக இருந்து கொண்டிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

அதாவது ஒரு கிலோ பச்சை மிளகாயை பறிப்பதற்கு கூலியாக 15 ரூபா கொடுக்க வேண்டியுள்ளதாகவும் தங்களுக்கு ஒரு கிலோ பச்சை மிளகாய் விற்றால் பறிப்பவர்களை விடவும் குறைவான தொகையான 5 ரூபாவே இலாபமாக கிடைப்பதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

கடந்த வருட இறுதி மாதத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 780 ரூபா தொடக்கம் 880 ரூபா வரை உயர்ச்சியடைந்து காணப்பட்டிருந்தது. 

சாதாரணமாக இம்மாதத்திலே ஒரு கிலோ பச்சைமிளகாயின் விலை 250 ரூபா தொடக்கம் 280 ரூபா வரை செல்வது வழமையாக இருந்து வந்தது, ஆனால் இந்நிலை தற்போது தலைகீழாக மாறி பச்சை மிளகாயின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

இதனால் மிளகாய் உற்பத்தியாளர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு இரண்டு இலட்சம் ரூபாவுக்கு மேல் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment