வவுனியா பாடசாலையில் ஆபத்தான குளவிகள் ; விரைந்து நடவடிக்கை எடுக்கவும் - News View

About Us

About Us

Breaking

Monday, April 30, 2018

வவுனியா பாடசாலையில் ஆபத்தான குளவிகள் ; விரைந்து நடவடிக்கை எடுக்கவும்

வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியில் ஆபத்தான குளவிகள் காணப்படுவதாக அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

சுமார் 2000 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் அண்மைக்காலமாக ஆபத்தான தேனி வகையை சேர்ந்த பாரிய குளவிகள் கூட்டமாக தங்குவதாகவும் அதனை தம்மால் அழிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்த அதிபர் தற்போது 5 இடங்களில் இவ்வாறான குளவிக் கூடுகள் காணப்படுவதால் மாணவர்களுக்கு ஆபத்து நேரும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக வவுனியா அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமையினால் நாளை பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தரும் பட்சத்தில் ஆபத்து நேர வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிலையில் வவுனியா நீர்த்தாங்கி மற்றும் அரச ஊழியர் விடுதியிலும் பாரிய குளவிக்கூடுகள் காணப்படுகின்ற நிலையில் இக் குளவிக்கூடுகள் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். 

எனவே ஆபத்து ஏற்படுவதற்கு முன்னர் இதனை அழிப்பதற்கு ஏதுவான நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment