முஸ்லிம் சமூகத்திற்கு அபிவிருத்தியும், உரிமை அரசியலையும் பேச வேண்டும் : பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி - News View

About Us

About Us

Breaking

Monday, April 30, 2018

முஸ்லிம் சமூகத்திற்கு அபிவிருத்தியும், உரிமை அரசியலையும் பேச வேண்டும் : பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

தமிழர்களுக்கு உரிமை ரீதியாக பேசினால் போதுமானது, சிங்கள சமூகத்தை அந்த அரசாங்கம் பார்த்துக் கொள்ளும், ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு அபிவிருத்தியும், உரிமை அரசியலையும் பேச வேண்டும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட மீறாவோடை அமீர் அலி வித்தியாலயத்தில் முப்பெரும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை சமூகம் மற்றும் பெற்றோர்கள் போன்று பின்புலம் பெரும் பலமான அணியினராக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மாத்திரம் ஒரு கட்சியின் தவிசாளர், ஒரு பிரதியமைச்சர் தேசியத்தில் நிமிர்ந்து பேச முடியும். பாராளுமன்றத்தில் தைரியத்தோடு பேச முடியும்.

மகிந்தவை தைரியத்தோடு புரட்ட முடியும், ஜனாதிபதி மைத்திபால மற்றும் பிரதமர் ரணில் ஆகியோரோடு தைரியமாக பேச முடியும், கேட்க முடியும். எங்களது பிரச்சனைகளான இரண்டு விடயங்களாக அபிவிருத்தியும், உரிமை அரசியலையும் பேச வேண்டிய நிகழ்வு.
மூன்று மாடிக் கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும், மீன் பிடிக்கவில்லை என்றால் அதற்கும் தீர்மானம் பெற்றுக் கொடுக்க வேண்டும். வேறு பிரச்சனை வந்தால் அதவும் பேசப்பட வேண்டும். இது இந்த நாட்டில் இருக்கின்ற முஸ்லிம் சமூகத்துக்கு இருக்கின்ற தனிப்பட்ட பிரச்சனை.

தமிழர்களுக்கு உரிமை ரீதியாக பேசினால் போதுமானது, சிங்கள சமூகத்தை அந்த அரசாங்கம் பார்த்துக் கொள்ளும், ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு இரண்டும் பேச வேண்டும். சாப்பாடும் வழங்க வேண்டும், பக்கட்டில் பணமும் வழங்க வேண்டும். இரண்டும் செய்ய முடியாது. பெரும் சிரமத்தோடு உங்களுக்காக அரசியல் பயணத்தை செய்து கொண்டிருக்கின்றோம்.

கல்குடாப் பிரதேசத்தில் கல்வி ரீதியான மாற்றங்கள் வர வேண்டுமாக இருந்தால், கடந்த காலத்தை போன்று வரவேண்டுமாக இருந்தால் பிரதேசத்திலுள்ள கற்றவர்கள் ஒன்றுகூடி தைரியமாக பேசுகின்ற அந்த நிகழ்வுக்கு வரவேண்;டும்.

புடவைக்குமேல் சொறிகின்ற கல்வியலாளர்களாக இருந்தால் அது சாதித்துக் கொள்ள முடியாமல் போகும். நாம் எங்கிருக்கின்றோம் என்ற விடயம் ஒரு அதிகாரி மற்றும் அரசியல்வாதிக்கு தெளிவாக இருக்க வேண்டும். ஆகாயத்தில் பறந்தாலும் எங்களது காலை நிலத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற திறமை இருக்க வேண்டும். இல்லை என்றால் அவரால் சாதிக்க முடியாது.
இதனை கல்வி அதிகாரிகள் இனிவரும் காலங்களில் பிழைகளை செய்யாது ஒற்றுமையாக இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில், எமது பிரதேசத்தில் கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற விடயத்தை கோரிக்கையாக முன்வைக்கின்றேன் என்றார்.

பாடசாலை அதிபர் எம்.மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலையின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா, நஜா மலர் வெளியீடு, 06வது பரிசளிப்பு விழா என்பன இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், மட்டக்களப்பு மத்தி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.கே.றகுமான், ஓட்டமாவடி உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.ருவைத் மற்றும் பாடசாலை அதிபர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலையில் அதிக சித்திகளைப் பெற்ற மாணவர்கள், தேசிய மட்டத்தில் பாடசாலைக்கு பெறுமை சேர்த்த மாணவர்கள் மற்றும் அதிதிகள், ஊர் பிரமுகர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாடசாலை அதிபர் எம்.மஹ்ரூப் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் 06வது பரிசளிப்பு விழாவின் நஜா மலர் முதல் பிரதியை கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு பாடசாலை அதிபரால் வழங்கி வைக்கப்பட்டது, மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.

எஸ்.எம்.எம். முர்ஷித்
ஊடகவியலாளர்

No comments:

Post a Comment