பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா : ஊசிகள் டி.என்.ஏ. பரி­சோ­தனை நடத்த உத்­த­ரவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 3, 2018

பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா : ஊசிகள் டி.என்.ஏ. பரி­சோ­தனை நடத்த உத்­த­ரவு

பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் கலந்­து­கொள்ளும் வீரர்கள் தங்­கி­யுள்ள விளை­யாட்டு கிரா­மத்­தி­லி­ருந்து ஒரு­தொகை ஊசிகள் (சிரேஞ்சர்ஸ்) கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 

இந்த ஊசிகளைப் பயன்­ப­டுத்­தி­யவர்கள் யார் என்ற தக­வல்கள் தெரி­ய­வில்லை. அந்த ஊசி­களை உட­ன­டியாக டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்­ப­டுத்தி வெகு­வி­ரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும்­படி அவுஸ்­தி­ரே­லிய ஊக்­க­ம­ருந்து தடுப்பு அமைப்பு உத்­த­ர­விட்­டுள்­ளது.

விளை­யாட்டு கிரா­மத்தை சுத்­தம்செய்யும்­போது துப்­புரவு தொழிலா­ளர்­க­ளால் கண்­டெ­டுக்­கப்­பட்ட சில தண்ணீர் போத்தல்களுக்குள் இந்த ஊசிகள் இருந்­துள்­ளன.­ இவை உடனடியாக அமைப்­பா­ளர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. 

அதனைத் தொடர்ந்து நட­வ­டிக்கை மேற்­கொண்ட அதி­கா­ரிகள் இந்த ஊசிகள் மூலம் வீரர்களால் ஊக்­க­ம­ருந்து பயன்­ப­டுத்­தப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். இதனால் உடனடியாக அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன் அறிக்கை இரு தினங்களுக்குள் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment