கடந்த 2018.02.10ம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் மூலம் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளிலிருந்து தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களைத் தெரிவு செய்யும் அமர்வு 2018.04.06ம் திகதி வெள்ளிக்கிழமை (நாளை) பிற்பகல் 2.30 மணிக்கு உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
அத்துடன், இந்நிகழ்வு ஒட்டு மொத்த ஓட்டமாவடி மக்களின் எதிர்பார்ப்பாகவும் அமைந்துள்ளது. அந்த வகையில், ஏற்கனவே ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டிருந்த குறித்த பிரதேச சபையானது இம்முறை இடம்பெற்ற புதிய தேர்தலின் பிரகாரம் பதினெட்டு உறுப்பினர்களை உள்ளடக்கியதாக அமையவுள்ளமை முக்கிய அம்சமாகும்.
அதற்காக சபையின் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீமின் ஏற்பாட்டில் நவீன மயப்படுத்தப்பட்ட உறுப்பினர்களுக்கான ஒன்று கூடல் மண்பம், தவிசாளர், உப தவிசாளருக்கான பிரத்தியேக காரியாலயங்கள் மற்றும் அதனுடனான புதிய நிருவாக உத்தியோகத்தர்களுக்கான காரியாலயங்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதுடன், பிரதேச சபையும் அழகுபடுத்தப்பட்டு வருகின்றமையினைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஓட்டமாவடி பிரதேச சபையில் வரலாற்றில் என்றுமில்லாதவாறு கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியடைந்திருந்தாலும், தற்பொழுது அவர்களுக்கிடையில் நடக்கும் உள் வீட்டுப் பிரச்சனைகளுக்கு மத்தியில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் யார் என்பதை நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் வரைக்கும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செயலாளர் ஹமீமின் தடபுடல் ஏற்பாடுகளின் காணொளி எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
https://youtu.be/e0-tGixVnXw
ஓட்டமாவடி அஹ்மத் இர்ஷாத்
No comments:
Post a Comment