வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார பிரிவில் 83 டெங்கு நோயாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 5, 2018

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார பிரிவில் 83 டெங்கு நோயாளர்கள்

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 83 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.எஸ்.நஜீப்ஹான் தெரிவித்தார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார பிரிவிலுள்ள செம்மண்ணோடை பிரதேசத்தில் 34 டெங்கு நோயாளர்களும்பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் 28 டெங்கு நோயாளர்களும் இணங்காணப்பட்டுள்ளதாகவும்ää இவ்விரண்டு பிரதேசங்களிலுமே அதிக டெங்கு காணப்படும் பிரதேசமாக இணங்காணப்பட்டுள்ளதா வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய டெங்கு வாரத்தினை முன்னிட்டு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார பிரிவினால் நேற்று புதன்கிழமை செம்மண்ணோடை பகுதியில் டெங்கு பரிசோதனை வேலைத் திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் செம்மண்ணோடை பகுதியிலுள்ள வீடுகளுக்கு சென்று டெங்கு பரிசோதனை இடம்பெற்ற போது இருபத்தைந்து வீடுகளில் டெங்கு அபாயம் காணப்பட்டதாகவும் பதினைந்து பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் பத்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர் இரா.இன்பராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

டெங்கு பரிசோதனை வேலைத் திட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய தொற்று நோய் வைத்திய அதிகாரி டாக்டர்.திருமதி.கே.தர்சினி, கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.ஹக்கீம், எஸ்.நஷீர், வாழைச்சேனை பொலிஸ் அதிகாரிகள், வாகரை கஜுவத்தை கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை நிருபர்

No comments:

Post a Comment