நான் மதிக்கின்ற ஒரு அரசியல் தலைமையே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் : பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, April 30, 2018

நான் மதிக்கின்ற ஒரு அரசியல் தலைமையே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் : பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவிப்பு

நான் மதிக்கின்ற ஒரு அரசியல் தலைமையே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் என விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

காத்தான்குடி பீச் வே ஹோட்டலில் நடைபெற்ற நீச்சல் பயிற்சியை முடிந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

29.4.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நான் மதிக்கின்ற ஒரு அரசியல் தலைமையாகும்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் அதே போன்று காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர் அவர்களும் இந்த காத்தான்குடியின் அபிவிருத்தியில் இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியில் பெரும் பங்களிப்பினை செய்து வருகின்றர்கள்.

முஸ்லிம்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர் நோக்குகின்ற இந்தக் காலகட்டத்தில் நாங்கள் பல்வேறு கட்சிகளில் அங்கத்தவர்களாக இருந்தாலும் அனைவரும்; ஒன்றுபட்டு சமூகத்திற்காக உழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எமது சமூகம் தொடர்பான பிரச்சினைகளில் எமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனைவரும் ஒன்று பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்.

அந்த அடிப்படையில் எதிர் காலத்தில் இந்த நாட்டில் புதிய அரசியலமைப்பாகினும் சரி அதே போன்று வேறு சட்ட மூலங்களாயினும் சரி முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமையாயினும் சரி எல்லா முஸ்லிம் அரசியல் தமைமைகளும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும்

அடுத்த வருடம் ஒரு ஜனாதிபதி தேர்தலை எதிர் நோக்கியிருக்கின்ற ஒரு கால கட்டத்தில் இன்று நாட்டின் அரசியல் நிலமை என்பது முற்று முழுதாக ஒரு குழப்பகரமான நிலைமைக்கு மாறியுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களாக அரச நடவடிக்கைகளில் மந்தமான நிலைமை காணப்படுகின்றது.

அடிக்கடி அமைச்சரவை மாற்றங்கள் என்று கூறப்படுவதனால் அரசாங்கத்தின் எதிர் காலம் என்பது மிக கஸ்டமான ஒரு சூழ் நிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என மேலும் தெரிவித்தா.

எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஊடகவியலாளர்

No comments:

Post a Comment