பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகரிடம் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை பாராளுமன்ற சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment