மேதினக் கூட்டம் தொடர்பில் குழப்பத்தில் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Monday, April 30, 2018

மேதினக் கூட்டம் தொடர்பில் குழப்பத்தில் பொலிஸார்

சர்வதேச தொழிலாளர் தினம் எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளைய தினம் நடைபெறவிருக்கும் பல மே தின கூட்டங்களை தடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் எமக்கு இல்லை. எனினும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை அனுமதிக்கவும் முடியாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிததார். 

அரசாங்கத்தின் தீர்மானத்தை மீறி நாளைய தினம் சில கட்சிகள் தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்படவுள்ள மே தின கொண்டாட்டங்கள் தொடர்பில் பொலிஸ் பிரிவின் விஷேட பாதுகாப்பு தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வழமையான மே தினக் கொண்டாட்டங்களை மே மாதம் 7 ஆம் திகதி ஒத்திவைப்பதாக அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது. ஆனால் தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்படவில்லை. 

எனினும் தற்போது வெசக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் என்பன நடைபெறும் சந்தர்ப்பத்தில் போக்குவரத்து நெரிசல் அதன் காரணமாக பொது மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டியது பொலிஸாரின் கடமை ஆகும். அதற்கேற்ப நாம் செயற்படுவோம் என்றார்.

No comments:

Post a Comment