தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும்> பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியே திலங்க சுமதிபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளது. இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர நவீன் திஸாநாயக்க,
பிரதமருக்கு எதிராக நேற்று பாராளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது திலங்க சுமதிபால பிரதி சபாநாயகர் என்ற வகையில் பக்கசார்பற்ற முறையில் நடந்திருக்க வேண்டும்.
ஆனால் அவர் பாராளுமன்றில் நடந்து கொண்ட விதம் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே எதிர்வரும் நாட்களில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment