வடக்கில் முடியும் என்றால் கிழக்கில் ஏன் முடியாது? : கருணா அம்மான் கேள்வி - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 3, 2018

வடக்கில் முடியும் என்றால் கிழக்கில் ஏன் முடியாது? : கருணா அம்மான் கேள்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தனது சுயமதிப்பை இழந்து, ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது. வடக்கில் ஈ.பி.டி.பியுடன் இணைய முடியும் என்றால், கிழக்கில் எங்களுடன் இணைந்து ஏன் ஆட்சி அமைக்க முடியாது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கேள்வியெழுப்பியுள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழ்த் தரப்புக்களுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். வெற்றி பெற்றி ருக்கின்ற எங்களுடைய வேட்பாளர்களின் பிரதேசங்களில் எங்களுடைய கட்சியின் ஆதரவில்லாமல் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.

வரவிருக்கின்ற மாகாணசபைத் தேர்தலிற் கூட கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமும், எதிர்பார்ப்புமாகும். அதற்காக இந்தப் பிரதேச சபை களில் இணைந்து செயற்பட நாங்கள் திட்டமிட்டிருக்கின்றோம்.

தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கடந்த காலங்களில் முழுப் பிரதேச சபை களிலும் ஆட்சியிலிருந்திருந்தாலும் இந்த முறை ஒரு பிரதேச சபையைக்கூட அவர்களால் முழுமையாகக் கைப்பற்ற முடியவில்லை. இவ்வாறானதொரு சங்கடமான நிலையில் தான் ஆட்சியமைப்பது சம்பந்தமான பேச்சுக்கள் நடைபெற்றுவருகின்றன.

தெற்கில் மகிந்த ராஜபக்சவுக்குக் கிடைத்த வெற்றியை எங்களுடைய கட்சிக்கான பெரிய வெற்றியாக நாங்கள் பார்க்கின்றோம். விரைவில் ஒரு ஆட்சி மாற்றம் வரும் என்பது உறுதியான விடயமாகும். எதிர்காலத்தில் எங்களுடைய கை களில் நிர்வாகங்கள் வரும். அதன் மூலம் நாங்கள் எமது மக்களுக்குப் பல சேவைகளை ஆற்றுவோம்.

எங்களைப் பொறுத்தவரை ரணில் தலைமை அமைச்சராக இருப்பதற்குத் தகுதியற்றவர். மைத்திரியும் ரணிலும் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.

இவர்களை நம்பித்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியிருந்தார்கள். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனியாகவே இருக்கின்றது. இதனைத் தமிழ் மக்கள் விளங்கிக்கொண்டு ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எதிர்வரும் காலத்தில் ஒரு மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்துவோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தங்களது சுயமதிப்பை இழந்து ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் பல தமிழ்க் கட்சிகள் வெற்றிபெற்றுள்ள நிலையிலும் அவர்களுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்குத் தடையாகவுள்ளனர். வாகரை மற்றும் வாழைச்சேனைப் பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எங்களது கட்சி வென்றுள்ளது. இந்த மூன்று கட்சிகளும் இணைந்தால் முஸ்லிம்களைத் தவிர்த்து அங்கு ஆட்சியமைக்க முடியும்.

ஆனால் அதற்குத் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு முன்வரு வதில்லை. டக்ளஸ் தேவானந்தாவை ஒட்டுக் குழுவென்றும் காட்டிக்கொடுத்தவர் என்றும் துரோகியென்றும் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அவர்களுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது என்றால் ஏன் இங்குள்ளவர்களுடன் ஆட்சியமைக்கமுடியாது.

இதனைப் பிரதேசவாதமற்ற நிலையில் பார்க்கவேண்டும். யாழ்ப்பாணத்துக்கு ஒருமுறை, மட்டக்களப்புக்கு ஒருமுறையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செயற்படுவது ஏற்றுக் கொள்ளமுடியாத விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்திசாதுரியமாகச் செயற்படு மாகவிருந்தால் வட -– கிழக்கில் அனைத்து உள்ளூராட்சிச் சபை களையும் தமிழர்களைக் கொண்டே ஆட்சியமைக்கும் நிலையிருக்கின் றது. இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment