பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான மற்றுமொரு சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (03) இடம்பெற்றது.
இன்று (03) காலை இடம்பெற்ற குறித்த சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலரும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாளை (04) இடம்பெறவுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் உள்ளிட்ட அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கிடையில் நேற்று (02) இரவும் சந்திப்பொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment