நெல்லின் விலையை தீர்மானிப்பவர்களாக விவசாயிகள் மாற வேண்டும் - அரசாங்க அதிபர் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 4, 2018

நெல்லின் விலையை தீர்மானிப்பவர்களாக விவசாயிகள் மாற வேண்டும் - அரசாங்க அதிபர்

நெல்லின் விலையை தீர்மானிக்ககூடியவர்களாக விவசாயிகள் மாறவேண்டும். இதன்மூலமே இலாபத்தினை பெற்றுக்கொள்ள முடியும். என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான ஆரம்ப கூட்டம் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் தலைமையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசாங்க அதிபர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் உற்பத்தி செய்யப்பட்டாலும், அதற்கான விலையை தீர்மானிப்பவர்களாக தரகர்களே இருக்கின்றனர். இதனால் தரகர்கள் அதிக இலாபத்தினை பெற்றுக்கொள்கின்றனர். விவசாயிகள் இலாபத்தினைப் பெற்றுக்கொள்ளமுடியாமல் திண்டாடுகின்றனர்.

அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படும் விலைக்கேற்ப நெல்லினை விற்பதற்கு எமது மாவட்டத்தில் நெல்உற்பத்தி இருப்பதும் இல்லை. இதற்கு நெல்லினை உலரவைப்பதற்கான வசதிகளும் இன்மையும் பிரச்சினையாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய நெல்லினை உலரவிடுவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுகளையும் சமர்ப்பித்திருக்கின்றோம். அவை சாத்தியமாகின்றபோது, இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெறும்.

அரசாங்கத்தின் அதிகாரிகளாக மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நாம் இருக்கின்றோம். உங்கள் பிரச்சினைகள் தொடர்பில் எமக்கு குறிப்பிடுகின்றவேளை அவற்றினை நாம் தீர்த்துவைக்ககூடிய வழிவகைகளை தேடுவோம். விவசாயத்தினூடாக எவ்வாறு வருமானத்தினை ஈட்டமுடியுமோ அதற்கான வழிவகைகளையும் நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

வனவள பாதுகாப்பினர் இருக்கின்ற வனங்களை பாதுகாப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் புதிய வனங்களையும் உருவாக்க வேண்டும். குறிப்பாக வீடுகளிலும் மரங்களை நடுவதற்கேற்ற வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன், அதிகாரிகள் உள்ளிட்ட விவசாயிள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment