ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் கருத்துக்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, March 5, 2018

ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் கருத்துக்கள்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு செயற்­பா­டு­களில் கட்சிக்குள் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டு­களை ஜன­நா­யக ரீதியில் தீர்க்க முயற்­சிக்­கின்றோம். கட்­சி­யினை குழப்பும் எந்­த­வொரு நகர்­வு­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டாது என ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் தெரி­வித்­தனர். பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்டுவரப்படும் நம்­பிக்­கை­யில்லா பிரேரணையை தோற்கடிக்கும் பலம் எம்­மிடம் உள்­ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். 

ஐக்­கிய தேசியக் கட்­சியை மறு­சீ­ர­மைக்க வேண்டும் எனவும் தலைமைத்­து­வத்தில் மாற்­றங்கள் கொண்­டு­வர வேண்டும் எனவும் கட்­சியின் பின்­வ­ரிசை (இளம் எம்.பி. க்கள்) தெரி­வித்து வருகின்றமை மற்றும் பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரேர­ணையை கொண்­டு­வ­ரு­கின்ற முயற்­சிகள் குறித்து கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களின் நிலைப்­பாட்­டினை விவ­வி­ய­போதே அவர்கள் இதனை தெரி­வித்­தனர். 

இது குறித்து கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அமைச்சர் கபீர் ஹசீம் கூறு­கையில், 
ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் மறு­சீ­ர­மைப்பு செயற்­பா­டுகள் இடம்பெற்று வரு­கின்­றன. குறிப்­பாக நடை­பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்­தலின் பின்னர் கட்­சிக்குள் சில கருத்து முரண்­பா­டுகள் எழுந்­துள்­ளன. எனினும் எமது அடுத்­த­கட்ட அர­சியல் நகர்­வு­களில் கட்­சியின் ஒற்­றுமை மிகவும் அம­சி­ய­மா­ன­தாகும். 

தனித்து செயற்­பட ஆரம்­பிக்கும் சந்­தர்ப்­பங்­களில் எம்மை பலப்படுத்­திக்­கொள்ள வேண்டும். இதில் கட்­சிக்குள் ஒற்­று­மையும் ஜன­நா­ய­கமும் நில­வ­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அவ்­வா­றான நிலையில் இப்­போது ஒரு­சிலர் கட்­சியின் செயற்­பா­டு­களை குழப்பும் வகையில் சில தீர்­மா­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். எனினும் இவை எதுவும் கட்­சியின் ஏக­ம­ன­தான தீர்­மானம் அல்ல.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யிலா பிரேரணை ஒன்­றினை கொண்­டு­வரும் நிலையில் அதனை நாம் முறி­ய­டிப்போம். ஆனால் கட்­சிக்குள் சிலர் அதற்­காக தூண்­டு­த­லாக இருக்கும் நிலையில் பிரச்­சி­னை­களை சரி­யாக இனங்­கண்டு ஜனநா­யக ரீதியில் தீர்­வு­களை பெற்றுக் கொள்­ளவே நாம் முயற்சிக்கின்றோம். 

முக்­கி­ய­மான மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெறும். அதில் சந்­தேகம் இல்லை. தலை­மைத்­துவ மாற்றம் என்­பது தொடர்பில் கட்சிக்குள் ஆழ­மாக சிந்­திக்­க­வேண்­டிய தேவை உள்­ளது. இதில் உடன­டி­யாக தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்க முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

அமைச்சர் மங்­கள சம­ர­வீர கூறு­கையில், 
ஐக்­கிய தேசியக் கட்­சியின் இன்­றைய நிலைப்­பாடு என்­ன­வென்­பது எமக்கு நன்­றா­கவே தெரியும். நாம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சகல தரப்­பு­டனும் இணைந்து செயற்­பட்டு வரு­கின்ற கார­ணத்­தினால் அனை­வரும் எவ்­வாறு சிந்­திக்­கின்­றனர் என தெரியும். கட்­சிக்குள் மறு­சீ­ர­மைப்பு செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் கட்சி உள்­ளது. அதற்­க­மைய அமைச்சர் சஜித் பிரேமதாச தலை­மையில் குழு­வொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. 

நாம் அனை­வரும் இணைந்து பல்­வேறு மாற்­றங்­களை முன்னெடுக்கும் திட்­டங்­களை இதில் முன்­வைத்­துள்ளோம். ஆகவே நாளை (இன்று) கூடும் கட்­சியின் பார­ளு­மன்ற குழுக் கூட்­டத்­திலும் அதன் பின்னர் கட்சி செயற்­குழுக் கூட்­டத்­திலும் முக்­கி­ய­மான விவகா­ரங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­படும். எனினும் கட்சியிக்குள் ஒரு சிலர் உணர்ச்­சி­வ­சப்­பட்டு தீர்­மா­னங்­களை முன்னெ­டுத்து வரு­கின்­றனர். 

அவர்­களின் செயற்­பா­டுகள் கார­ண­மாக எந்­த­வித நகர்­வு­களும் இடம்­பெற்­றப்­போ­வ­தில்லை. பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்பிக்கையில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வ­தாக கூறப்­ப­டு­வதை வெறும் வாய் வார்த்­தை­க­ளா­கவே கரு­து­கின்றோம். அவ்­வாறு கொண்­டு­வந்­தாலும் நாம் சுமூ­க­மாக தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ள முடியும் எனக் குறிப்­பிட்டார். 

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி கரு­ணா­நா­யக கூறு­கையில், 
இன்று நாட்டில் பாரிய அர­சியல் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் முயற்சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஒரு சில­ரது தனிப்பட்ட தேவை­களை கொண்டு கட்­சி­யினை குழப்பும் செயற்பாடு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். கட்­சியின் தலைமைத்­துவம் குறித்து நாம் அதி­ருப்தி கொள்­ள­வில்லை. மாற்றங்கள் அவ­சியம். அது கட்­சியின் வேலைத்­திட்­டங்­களில் முன்னெ­டுக்­கப்­பட வேண்டும். மாறாக கட்­சி­யினை பலவீனப்படுத்தும் தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்க முடி­யாது. 

கட்­சியின் இளம் உறுப்­பி­னர்கள் அதனை தெரிந்­து­கொள்ள வேண்டும். மாற்­றங்­களை நாமும் ஏற்­று­கொள்ள வேண்டும் என்பதை நாம் மறுக்­க­வில்லை. ஆனால் நாட்­டினை முன்­னெ­டுக்க பல­மான கட்சி அவ­சியம். இந்த நாட்டின் பொரு­ளா­தார செயற்பாடுகளை கட்­டி­யெ­ழுப்ப சரி­யான தலை­மைத்­துவம் அவசியம். ஆகவே தலை­மைத்­து­வத்தை பலப்­ப­டுத்த வேண்­டிய தேவை இளம் உறுப்­பி­னர்கள் அனை­வ­ருக்கும் உள்­ளது. 

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­பால ஹெட்­டி­யா­ராச்சி 
நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடிவின் பின்னரே ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் ஒரு நெருக்­கடி நிலை­மையை உரு­வாக்­கி­யுள்­ளது. எனினும் இந்த தேர்­தலில் அர­சாங்­கத்­திற்கு மக்கள் ஒரு எச்­ச­ரிக்­கையை மட்­டுமே விடுத்­துள்­ளனர். அதேபோல் பிர­த­மரை நீக்­கவும் ஒரு அணி முயற்­சித்து வரு­கின்­றது. ஒரு சில­ரது தூண்டுதலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் தீர்மானம் எடுக்க முடியாது. கட்சியின் மறுசீரமைப்பு திட்டங்கள் அவசியம், அதனை நாம் சரியாக முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். 

இந்நிலையில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் அலரிமாளிகையில் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு கூடுகின்றது. இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் குறித்து முக்கியமான சில தீர்மானங்கள் முன்வைக்கப்படவுள்ளன எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment