21 நாடுகள் பங்கேற்கும் டென்னிஸ் தொடர் கொழும்பில் இன்று ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 4, 2018

21 நாடுகள் பங்கேற்கும் டென்னிஸ் தொடர் கொழும்பில் இன்று ஆரம்பம்

இலங்கை உட்­பட 21 நாடு­களைச் சேர்ந்த 46 அணிகள் பங்­கு­பற்றும் இரு சர்­வ­தேச கனிஷ்ட டென்னிஸ் போட்­டிகள் கொழும்பில் இன்று ஆரம்பமாகின்றன. ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் 2 ஒற்­றையர் போட்­டிகள் மற்றும் ஓர் இரட்­டையர் போட்­டியைக் கொண்ட உலக கனிஷ்ட டென்னிஸ் போட்டிகள் எதிர்­வரும் 10ஆம் திகதி நிறைவுபெறும்.

அதனைத் தொடர்ந்து ஆண்­க­ளுக்­கான டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்­டிகள், பெண்­க­ளுக்­கான பெட் கிண்ண டென்னிஸ் போட்­டிகள் எதிர்வரும் 12 ஆம் திக­தி­முதல் 17 ஆம் திக­தி­வரை நடை­பெறும். இவை அனைத்தும் 14 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான அணிநிலை தகு­திகாண் சுற்று டென்னிஸ் போட்டி­க­ளாகும்.

இப்போட்­டி­களில் குவைத், பாகிஸ்தான், லெபனான், மொங்கோலியா, ஈரான், கட்டார், பசுபிக் ஓஷா­னியா, பாஹ்ரெய்ன், பூட்டான், மலே­சியா, மாலை­தீ­வு, சவூதி, சிரியா, துர்க்­மே­னிஸ்தான், தஜி­கிஸ்தான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், சிங்­கப்பூர், லாவோஸ், கிர்கிஸ்தான், வரவேற்பு நாடான இலங்கை ஆகிய நாடுகள் பங்குபற்றுகின்றன.

No comments:

Post a Comment