நாட்டில் இடம்பெறும் விரும்பத்தகாத சில சம்பவங்கள் தொடர்பில் அனைவரும் தமக்குள்ள பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டி, திகன பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இவ்வாறான வன்முறைகளை கட்டுப்படுத்துவதில் பொலிஸாரிடமும் சில குறைபாடுகளை காணமுடிகிறது. இந் நிலைமை ஆரோக்கியமானதல்ல. யாராக இருப்பினும் தமக்குள்ள பொறுப்பினை உணர்ந்து இவ்வாறான சம்பவங்களின் போது நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment