பேஸ்புக் நிறுவத்தினால் பரீட்சார்த்த நடவடிக்கையான செயற்பட்டு வந்த எக்ஸ்புளோர் பீட் (explore feed) அந்நிறுவனத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பரீட்சார்த்த நடவடிக்கையை இலங்கை உட்பட 6 நாடுகளில் பேஸ்புக் நிறுவனம் கடந்த மாதங்களாக செயற்படுத்தி வந்தது.
இந்நிலையில், குறித்த பரீட்சார்த்த நடவடிக்கை தொடர்பில் பேஸ்புக் பயனாளர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில் செயற்பாடு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக்கின் இவ்வாறான செயற்பாட்டால் 6 நாடுகளின் பேஸ்புக் பயனாளர்களுக்கு தங்கள் நண்பர்கள் மற்றும் கட்டணம் செலுத்தப்பட்ட பதிவுகள் மாத்திரமே பேஸ்புக் பக்கங்களில் காண்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய பகுதிகளுக்கு எக்ஸ்புளோர் பீட் (explore feed) என்ற பிரிதொரு பகுதிக்கு சென்று தான் ஏனைய தரவேற்றங்களை பார்வையிடும் வகையில் பேஸ்புக் மாற்றமடைந்தது.
இருந்த போதிலும் குறித்த நடவடிக்கையை பேஸ்புக் பயனாளர்கள் விரும்பவில்லை. இதனால் இன்று முதல் பேஸ்புக்கில் இருந்து எக்ஸ்புளோர் பீட் (explore feed)நீக்கப்பட்டுள்ளது.
இதனால் பரீட்சார்த்த நடவடிக்கை காரணமாக பேஸ்புக் பக்கங்களுக்கான விருப்புகள் குறைவடைந்துள்ள நிலையில் அது இணையத்தளங்களுக்கு பெரும் பாதிப்பைஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment