சுனாமியால் பாதிக்கப்பட்ட மருதமுனை 65 மீற்றர் மக்களுக்காக மேட்டுவட்டையில் கட்டப்பட்ட வீடுகளை கையளிப்பதற்கான பெயர் பட்டியலை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் செயலகம் வெளியிட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி. வனிகசிங்கவினால் அனுப்பப்பட்டுள்ள 78 பேருடைய பெயர் பட்டியலை கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி மருதமுனையிலுள்ள பொது இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளார்.
நேர்முகப்பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்டு வெளியாகியுள்ள இப்பெயர் பட்டியலில் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் 14 நாட்களுக்குள் எழுத்து மூலமாக அறிவிக்குமாறு பிரதேச செயலாளர் பொதுமக்களை கேட்டுள்ளார்.
பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள் தொடர்பில் ஒழுங்கீனம் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டப்படும் போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு மீதமானவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். நிராகரிக்கப்படுகின்ற வீடுகள் தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து மறு சுற்றில் எஞ்சிய வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மருதமுனை மக்களுக்காக கட்டப்பட்ட 178 வீடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட வீடுகள் போக மீதமானவற்றினை கையளிப்பதற்கான பெயர் பட்டியலே தற்போது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது
No comments:
Post a Comment