மணிரத்னம் பற்றிய ரகசியத்தை வெளியிட்ட சுஹாசினி - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 6, 2018

மணிரத்னம் பற்றிய ரகசியத்தை வெளியிட்ட சுஹாசினி

சென்னையில் நடைபெற்ற ‘அபியும் அனுவும்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சுஹாசினி, மணிரத்னம் குறித்த ரகசியம் ஒன்றை வெளியிட்டார்.

சரிகம வழங்க யூட்லி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் ‘அபியும் அனுவும்’. தமிழ், மலையாளத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகிணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தரண் இசையமைத்திருக்கும் இதை பி ஆர் விஜயலட்சுமி இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய படத்தின் நாயகன் டொவினோ தாமஸ்...

என்னு நிண்டே மொய்தீன் படத்துக்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. நல்ல கதைக்காக நான் காத்திருந்தேன். அந்த நேரத்தில் தான் இயக்குனர் விஜயலட்சுமி மேடத்திடம் கதை கேட்டேன், சிறப்பான கதை. தமிழ் சினிமாவில் இது ஒரு சிறந்த படமாக இருக்கும். ” என்றார்.

சுஹாசினி பேசும் போது, இயக்குனர் விஜிக்கும், எனக்கும் இருக்கும் உறவைப் பற்றி நிறைய பேசிக் கொண்டே போகலாம். யாருக்கும் தெரியாத இன்னொரு வி‌ஷயத்தையும் கூற வேண்டும். மணிரத்னம் யாரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை என்று தான் எல்லோருக்கும் தெரியும். 

ஆனால் விஜியின் அண்ணன் ரவி பந்துலுவின் கன்னட படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். அதை இங்கு நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன். ரொம்ப நாள் கழித்து பிரபுவுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி” என்று கூறினார். நிகழ்ச்சியில் இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமி, பியாபாஜ்பாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment