போலாந்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, March 4, 2018

போலாந்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி

போலாந்து நாட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கேஸ் வெடிப்பு காரணமாக அந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர்.

போலாந்து நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பொஸ்னான் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தில் 18 குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், இந்த கட்டிடத்தில் நேற்று மாலை ஒரு பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. இதன் காரணமாக அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் நான்கு குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.

இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் ஒரு வீட்டில் ஏற்பட்ட கேஸ் லீக் தான் இந்த விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment