இந்தியா மற்றும் பங்களாதேஷ் கிரிக்கட் அணிகள் இலங்கை விஜயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 4, 2018

இந்தியா மற்றும் பங்களாதேஷ் கிரிக்கட் அணிகள் இலங்கை விஜயம்

சுதந்திர வெற்றிக்கிண்ண கிரிக்கட்போட்டியில் கலந்துகொள்ளும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளன. இந்த ரி20 போட்டித்தொடரில் முதலாவது போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நாளை இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிகள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்கு தினேஸ் சந்திமால் தலைமைதாங்குகின்றார். வேகப்பந்துவீச்சாளர் நுவன் ,பிரதீப், சுரங்க, லக்மால் மற்றும் துஜ்மந்த சமிர ஆகிய வீரர்கள் மீண்டும் அணியில் சேர்ந்துக்கொள்ளப்பட்டுள்ளனர். விக்கற் காப்பாளராக தனஞ்ச சில்வா செயற்படவுள்ளார்.
இதேவேளை பங்களாதேஷ் அணியின் தலைவர் சகீப் அல்ஹசன் இந்த போட்டியில் கலந்துகொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக மகமதுல்லா செயற்படவுள்ளார்.

இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமைதாங்கவுள்ளார். கப்டன் விராட்கோலி , விக்கட் காப்பாளர் டோனி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா , வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா, புவனேஸ்வர் குமார், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் இப்போட்டியில் கலந்துகொள்ளவில்லை.

No comments:

Post a Comment