'கடல் முழுவதும் நட்பு' எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் வருடத்திற்கான பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இலங்கை கடற்படையின் சமுத்ரா மற்றும் சுரனிமல எனும் இரு கப்பல்கள் இந்தியாவிற்கு சென்றுள்ளன. இவ்விரு கப்பல்களும் நாட்டை விட்டு கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
மிலன் என அறியப்படும் இக்கடற்படை பயிற்சி இந்தியக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த கடற்படைகளுக்கிடையிலான பயிற்சிகள் அந்தமான் தீவின் பிளையர் துறைமுகத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கையின் கிழக்கு பகுதியான திருகோணமலை துறைமுகத்திலிருந்து அந்தமான் தீவின் பிளையர் துறைமுகத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளது.
குறித்த பயிற்சியில் கலந்துகொள்வதற்காக ஆறு கடற்படை பயிலுனர் அதிகாரிகள் மற்றும் 27 கடற்படை அதிகாரிகள் உட்பட 284 கடற்படை வீரர்கள் கப்பல்களுடன் பயணித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment